• Nov 26 2024

50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெருகல் கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிப்பு...!

Sharmi / Mar 26th 2024, 1:59 pm
image

திருகோணமலை வெருகல் பகுதியில் 50 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், பிரதம பணிப்பாளர், வெருகல் பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெருகல் கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிப்பு. திருகோணமலை வெருகல் பகுதியில் 50 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், பிரதம பணிப்பாளர், வெருகல் பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement