• Oct 18 2024

மூத்த ஊடகவியலாளர் 'வீயெஸ்ரி' தங்கராஜா காலமானார்! samugammedia

Chithra / Apr 20th 2023, 2:22 pm
image

Advertisement

மூத்த ஊடகவியலாளர் சரவணமுத்து தங்கராஜா சுகவீனம் காரணமாகக் காலமானார்.

தமிழர் தாயகத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்கூட ஊடகப்பணியில் தன்னை ஆத்மார்த்தமாக இணைத்திருந்தவர்களில் சரவணமுத்து தங்கராஜா குறிப்பிடத்தக்கவர்.

நூலகர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், சிரேஷ்ட உதவி ஆசிரியர் என பல்துறைகளிலும் அவரின் ஊடகப் பணி மகத்தானதாகவும் மக்களுக்கானதாகவும் மெச்சத்தக்க வகையிலும் அமைந்திருந்தது.

'உதயன்' - 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் முன்னாள் சிரேஷ்ட உதவி ஆசிரியரான அவர், அப்பத்திரிகையில் 'வீயெஸ்ரி' என்ற புனைபெயரில் சிங்கள மொழிக்கட்டுரைகள் ஏராளமானவற்றை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து பிரசுரித்த பெருமை அவரைச் சாரும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக ஊடகப் பணியில் இருந்து  உதயனில் இருந்து  ஓய்விலிருந்த வந்த அவர், நேற்றுக் காலமானார்.

அவரின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை பி.ப. 3 மணியளவில் உரும்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளன.    

மூத்த ஊடகவியலாளர் 'வீயெஸ்ரி' தங்கராஜா காலமானார் samugammedia மூத்த ஊடகவியலாளர் சரவணமுத்து தங்கராஜா சுகவீனம் காரணமாகக் காலமானார்.தமிழர் தாயகத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்கூட ஊடகப்பணியில் தன்னை ஆத்மார்த்தமாக இணைத்திருந்தவர்களில் சரவணமுத்து தங்கராஜா குறிப்பிடத்தக்கவர்.நூலகர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், சிரேஷ்ட உதவி ஆசிரியர் என பல்துறைகளிலும் அவரின் ஊடகப் பணி மகத்தானதாகவும் மக்களுக்கானதாகவும் மெச்சத்தக்க வகையிலும் அமைந்திருந்தது.'உதயன்' - 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் முன்னாள் சிரேஷ்ட உதவி ஆசிரியரான அவர், அப்பத்திரிகையில் 'வீயெஸ்ரி' என்ற புனைபெயரில் சிங்கள மொழிக்கட்டுரைகள் ஏராளமானவற்றை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து பிரசுரித்த பெருமை அவரைச் சாரும்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக ஊடகப் பணியில் இருந்து  உதயனில் இருந்து  ஓய்விலிருந்த வந்த அவர், நேற்றுக் காலமானார்.அவரின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை பி.ப. 3 மணியளவில் உரும்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளன.    

Advertisement

Advertisement

Advertisement