• Jan 30 2025

சமூக ஊடகங்களில் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட உப அதிபர் கைது

Chithra / Jan 29th 2025, 11:55 am
image


வடமத்திய மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைப் பரீட்சையின் தரம் 11 சிங்கள மொழி மற்றும் இலக்கிய வினாத்தாளை  கசியவிட்ட உப அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் உப அதிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு நேற்று உப அதிபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் அனுராதபுரம், தம்மனக்குளத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.

இந்தத் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மேற்கண்ட வினாத்தாள்கள் வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் பரவுவது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட உப அதிபர் கைது வடமத்திய மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைப் பரீட்சையின் தரம் 11 சிங்கள மொழி மற்றும் இலக்கிய வினாத்தாளை  கசியவிட்ட உப அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் உப அதிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு நேற்று உப அதிபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைதுசெய்யப்பட்ட நபர் அனுராதபுரம், தம்மனக்குளத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.இந்தத் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மேற்கண்ட வினாத்தாள்கள் வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் பரவுவது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement