• Sep 20 2024

விக்கி சாதாரணமானவர் அல்ல சாணக்கியன் - தலையை அசைத்து கட்சிகளை பிரிப்பதில் வல்லவர் - சரவணபவன்!

Tamil nila / Feb 12th 2023, 11:16 am
image

Advertisement

சி.வி.விக்கினேஸ்வரனுடன் சென்றால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து சென்றதாகவும் ஆனால் சி.வி.விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரிந்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டள்ளார்.


இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


விக்கினேஸ்வரன் எங்கு சென்றாலும் சேர்வதும் பின்னர் பிரிப்பதுமே அவருடைய பாணி என்றும் சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புரிந்துணர்வு இல்லாமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து அவர் கட்சியை விட்டு அவர்கள் வெளியேறினார்கள் என்றும் இதன் உண்மை தன்மை தொடர்பில் எதுவும் 

கூற முடியாத நிலையே காணப்படுவதாக சரவணபவன் மேலும் தெரிவித்திருந்தார்.


பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் சம்மதித்திருந்ததாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் நம்பியதாகவும் சரவணபவன் குறிப்பிட்டிருந்தார்.


விக்கி சாதாரணமானவர் அல்ல சாணக்கியன் - தலையை அசைத்து கட்சிகளை பிரிப்பதில் வல்லவர் - சரவணபவன் சி.வி.விக்கினேஸ்வரனுடன் சென்றால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து சென்றதாகவும் ஆனால் சி.வி.விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரிந்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டள்ளார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.விக்கினேஸ்வரன் எங்கு சென்றாலும் சேர்வதும் பின்னர் பிரிப்பதுமே அவருடைய பாணி என்றும் சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புரிந்துணர்வு இல்லாமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து அவர் கட்சியை விட்டு அவர்கள் வெளியேறினார்கள் என்றும் இதன் உண்மை தன்மை தொடர்பில் எதுவும் கூற முடியாத நிலையே காணப்படுவதாக சரவணபவன் மேலும் தெரிவித்திருந்தார்.பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் சம்மதித்திருந்ததாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் நம்பியதாகவும் சரவணபவன் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement