• Nov 25 2024

நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்...!samugammedia

Sharmi / Jan 24th 2024, 10:03 am
image

நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  கவனயீர்ப்பு போராட்மொன்று யாழில் இன்று(24)  முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் நிகழ்நிலை காப்புசட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(24) இரண்டாம் வாசிப்பு நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில்,  உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கிறீஸ்தவ  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(24)  காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக உரிமையை பறிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறு, நாட்டு மக்களை அச்சமூட்டும் நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தை மீளப்பெறு, சட்டமாக்க வேண்டாம் சட்டமாக்க வேண்டாம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமாக்க வேண்டாம், ஜனநாயகத்தை சிதைக்காதே போன்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1907 இல் ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியமானது இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தோடும், யாழ். மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றிப்புக்கான ஆணைக்குழுவோடும் சேர்ந்து பணியாற்றி வருகின்றது. 

அதேவேளை நிகழ்நிலைக் காப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2023 செப்டெம்பரில் கண்டன ஊடக அறிக்கை ஒன்றையும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்.samugammedia நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் இன்று(24)  முன்னெடுக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் நிகழ்நிலை காப்புசட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(24) இரண்டாம் வாசிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,  உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கிறீஸ்தவ  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(24)  காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.ஜனநாயக உரிமையை பறிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறு, நாட்டு மக்களை அச்சமூட்டும் நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தை மீளப்பெறு, சட்டமாக்க வேண்டாம் சட்டமாக்க வேண்டாம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமாக்க வேண்டாம், ஜனநாயகத்தை சிதைக்காதே போன்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப் போராட்டத்தில் யாழ் கிறீஸ்தவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.1907 இல் ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியமானது இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தோடும், யாழ். மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றிப்புக்கான ஆணைக்குழுவோடும் சேர்ந்து பணியாற்றி வருகின்றது. அதேவேளை நிகழ்நிலைக் காப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2023 செப்டெம்பரில் கண்டன ஊடக அறிக்கை ஒன்றையும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement