• Apr 28 2024

யூடியூப் ட்ரெண்டிங்கில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "தளபதி 67"!

Sharmi / Feb 8th 2023, 9:51 pm
image

Advertisement

யூடியூப் டாப் 10 டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளிவந்த நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.



வம்சியின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நெகிழ்ச்சியூட்டும் சென்டிமென்ட் கதை, துள்ளலான பாடல்கள், அசர வைக்கும் நடனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாரிசு திரைப்படம் பெற்றது.



இதற்கிடையே படத்தின் வசூல் உலகளவில் ரூ.300 கோடியை தாண்டிவிட்டதாக தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கேஷ்வரா படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #VarisuHits300Crs என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.



இந்நிலையில் யூடியூப் டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் வீடியோக்களே டாப் 10 இடங்களை ஆக்கிரமித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதன்படி கடந்த 3ம் தேதி வெளியான தளபதி 67 டைட்டில் புரோமோ வீடியோ தொடர்ந்து நான்காவது நாளாக யூடியூப் டிரெண்டிங்கில் 39 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.




யூடியூப் ட்ரெண்டிங்கில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "தளபதி 67" யூடியூப் டாப் 10 டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தாண்டு பொங்கலுக்கு வெளிவந்த நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.வம்சியின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.நெகிழ்ச்சியூட்டும் சென்டிமென்ட் கதை, துள்ளலான பாடல்கள், அசர வைக்கும் நடனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாரிசு திரைப்படம் பெற்றது.இதற்கிடையே படத்தின் வசூல் உலகளவில் ரூ.300 கோடியை தாண்டிவிட்டதாக தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கேஷ்வரா படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #VarisuHits300Crs என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.இந்நிலையில் யூடியூப் டிரெண்டிங்கில் நடிகர் விஜய்யின் வீடியோக்களே டாப் 10 இடங்களை ஆக்கிரமித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.அதன்படி கடந்த 3ம் தேதி வெளியான தளபதி 67 டைட்டில் புரோமோ வீடியோ தொடர்ந்து நான்காவது நாளாக யூடியூப் டிரெண்டிங்கில் 39 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement