• Aug 28 2025

கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவம்; அலங்கார சப்பறத்தில் ஊர்வலம் வந்த விநாயகர்!

shanuja / Aug 27th 2025, 5:47 pm
image

அக்கரைப்பற்று  கோளாவில் அறுத்த நாக்கொட்டீஸ்வரர் என அழைக்கப்படும் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமான் மற்றும் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்தோற்சவங்களும் விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடுகளும் இன்று (27) இடம்பெற்றது.


விநாயகப் பெருமானைப் போற்றிக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி  உற்சவம் இன்று உலகெங்கிலும் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. 


மூர்த்தி,தலம்,தீர்த்தம்,விருட்சம் ஆகிய சிறப்பியல்புகளை கொண்ட ஆலயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 


தீர்த்தோற்சவ தினமான இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கப்பட்டதன் பின்னர் கொடிமரப்பூஜை நடைபெற்றது.


தொடர்ந்து மூலவருக்கும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கும் விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. 


 

அதன்பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் அமர்ந்தப்பட்டு ஊர்வலமாக பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ சமுத்திர தீர்த்தோற்சவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.


பின்பு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் அமர்த்தப்பட்ட விநாயகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.  


விநாயகப் பெருமானின் நாளாகப் போற்றப்படும் இன்றைய விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் பக்தர்கள் குவிந்து விநாயகனின் ஆசியைப் பெற்றுள்ளனர்.

கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவம்; அலங்கார சப்பறத்தில் ஊர்வலம் வந்த விநாயகர் அக்கரைப்பற்று  கோளாவில் அறுத்த நாக்கொட்டீஸ்வரர் என அழைக்கப்படும் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமான் மற்றும் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்தோற்சவங்களும் விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடுகளும் இன்று (27) இடம்பெற்றது.விநாயகப் பெருமானைப் போற்றிக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி  உற்சவம் இன்று உலகெங்கிலும் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம்,விருட்சம் ஆகிய சிறப்பியல்புகளை கொண்ட ஆலயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தீர்த்தோற்சவ தினமான இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கப்பட்டதன் பின்னர் கொடிமரப்பூஜை நடைபெற்றது.தொடர்ந்து மூலவருக்கும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கும் விசேட அலங்கார பூஜை நடைபெற்றது.  அதன்பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் அமர்ந்தப்பட்டு ஊர்வலமாக பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ சமுத்திர தீர்த்தோற்சவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.பின்பு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் அமர்த்தப்பட்ட விநாயகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.  விநாயகப் பெருமானின் நாளாகப் போற்றப்படும் இன்றைய விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் பக்தர்கள் குவிந்து விநாயகனின் ஆசியைப் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement