• May 17 2024

உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை!!!

crownson / Dec 12th 2022, 8:46 am
image

Advertisement

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டம் எல்லை மீறியதில், ஒரு சிலர் அங்கிருந்த கடைகளை சூறையாடினர்.

அங்கு, பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது, சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார்,m கண்ணீர் புகைக் குண்டு வீசி, விரட்டியடித்தனர்.

இதற்கு முன்னர் போர்த்துகலை வீழ்த்தி மொராக்கோ அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையொட்டி, பாரிஸ் நகரில் மொராக்கோ ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போது ரசிர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததில், அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, இதுவரை 70-க்கும் மேற்பட்டோரை பாரிஸ் போலீசார் கைது செய்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கொண்டாட்டம் எல்லை மீறியதில், ஒரு சிலர் அங்கிருந்த கடைகளை சூறையாடினர். அங்கு, பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார்,m கண்ணீர் புகைக் குண்டு வீசி, விரட்டியடித்தனர்.இதற்கு முன்னர் போர்த்துகலை வீழ்த்தி மொராக்கோ அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.இதையொட்டி, பாரிஸ் நகரில் மொராக்கோ ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போது ரசிர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததில், அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, இதுவரை 70-க்கும் மேற்பட்டோரை பாரிஸ் போலீசார் கைது செய்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement