சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இந்த முயற்சியால் ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் சுற்றுலா தொடர்பான வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி விசா கட்டண விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்
ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு, நெதர்லாந்து இராச்சியம், பெல்ஜியம் இராச்சியம், ஸ்பெயின் இராச்சியம், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த், போலந்து குடியரசு
கஜகஸ்தான் குடியரசு,சவுதி அரேபியா இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசு, சீன மக்கள் குடியரசு , இந்திய குடியரசு, இந்தோனேசியா குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, இராச்சியம் தாய்லாந்து , மலாயா கூட்டமைப்பு, ஜப்பான், பிரான்ஸ் குடியரசு, அமெரிக்கா, கனடா, செக் குடியரசு
இத்தாலி குடியரசு, சுவிஸ், ஆஸ்திரியா குடியரசு, இஸ்ரேல் மாநிலம், பெலாரஸ் குடியரசு, ஈரான் இஸ்லாமிய குடியரசு, ஸ்வீடன் இராச்சியம், பின்லாந்து குடியரசு
டென்மார்க் இராச்சியம், கொரியா குடியரசு, கத்தார் மாநிலம், ஓமன் சுல்தானகம், பஹ்ரைன் இராச்சியம், நியூசிலாந்து, குவைத் மாநிலம், நோர்வே இராச்சியம், துருக்கி குடியரசு, பாகிஸ்தான் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா விலக்கை இலங்கை அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து தற்போது மெல்ல மெல்ல அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் நாட்டை மேலும் வளர்ச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
40 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட விசா; சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த முயற்சியால் ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் சுற்றுலா தொடர்பான வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கையாகத் தெரிவித்துள்ளார். அதன்படி விசா கட்டண விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு, நெதர்லாந்து இராச்சியம், பெல்ஜியம் இராச்சியம், ஸ்பெயின் இராச்சியம், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த், போலந்து குடியரசுகஜகஸ்தான் குடியரசு,சவுதி அரேபியா இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசு, சீன மக்கள் குடியரசு , இந்திய குடியரசு, இந்தோனேசியா குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, இராச்சியம் தாய்லாந்து , மலாயா கூட்டமைப்பு, ஜப்பான், பிரான்ஸ் குடியரசு, அமெரிக்கா, கனடா, செக் குடியரசு இத்தாலி குடியரசு, சுவிஸ், ஆஸ்திரியா குடியரசு, இஸ்ரேல் மாநிலம், பெலாரஸ் குடியரசு, ஈரான் இஸ்லாமிய குடியரசு, ஸ்வீடன் இராச்சியம், பின்லாந்து குடியரசுடென்மார்க் இராச்சியம், கொரியா குடியரசு, கத்தார் மாநிலம், ஓமன் சுல்தானகம், பஹ்ரைன் இராச்சியம், நியூசிலாந்து, குவைத் மாநிலம், நோர்வே இராச்சியம், துருக்கி குடியரசு, பாகிஸ்தான் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா விலக்கை இலங்கை அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து தற்போது மெல்ல மெல்ல அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் நாட்டை மேலும் வளர்ச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.