• Jan 23 2025

இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஐயம்

Tharmini / Jan 13th 2025, 3:46 pm
image

உலகில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ள மருந்துத் துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும் திருத்துவதற்கும் முன் நிற்கும் அனைத்து ஊழியர்களையும் அரசாங்கம் ஊக்குவிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை தெளிவுபத்தினார்.

53 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான உத்தரவாதமளிக்கப்பட்ட மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு உழைத்து வரும் இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் பங்கு அளப்பெரியது என அமைச்சர் தெரிவித்தார்.

நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் வகையில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மருந்து விநியோக வலையமைப்பு மற்றும் அதன் தற்போதைய செயற்பாடுகள் மருந்து கொள்வனவு செயல்முறை மற்றும் மருந்து விநியோக வேலைத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்த அமைச்சர் எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இங்கு தரச் சான்றிதழ்கள் வழங்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

இந்தக் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் போது அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபன அலுவலகத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு அவற்றை நேரில் அவதானித்ததுடன் அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் மனுஜ் சி. வீரசிங்க முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். சுபசிங்க ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.



இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஐயம் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ள மருந்துத் துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும் திருத்துவதற்கும் முன் நிற்கும் அனைத்து ஊழியர்களையும் அரசாங்கம் ஊக்குவிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை தெளிவுபத்தினார்.53 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான உத்தரவாதமளிக்கப்பட்ட மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு உழைத்து வரும் இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் பங்கு அளப்பெரியது என அமைச்சர் தெரிவித்தார்.நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் வகையில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.மருந்து விநியோக வலையமைப்பு மற்றும் அதன் தற்போதைய செயற்பாடுகள் மருந்து கொள்வனவு செயல்முறை மற்றும் மருந்து விநியோக வேலைத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்த அமைச்சர் எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கினார்.இங்கு தரச் சான்றிதழ்கள் வழங்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.இந்தக் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் போது அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபன அலுவலகத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு அவற்றை நேரில் அவதானித்ததுடன் அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் மனுஜ் சி. வீரசிங்க முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். சுபசிங்க ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement