• Nov 24 2024

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது எதிர்ப்பு அரசியல் அல்ல! சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன்

Chithra / Sep 18th 2024, 3:39 pm
image

 

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல, இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரிந்து கிடக்கும் எமது தமிழ்த் தேச உறவுகளை ஒன்றுபடுத்தி ஒரே தேசமாக திரட்டுவதற்கான களமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு அமைந்துள்ளது.

அதனை உணர்ந்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கமும், அதன் ஊடாக அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ளதனையும் நாம் அறிவோம்.

அந்தவிதத்தில் கடந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், மறுபுறத்தில் எமது தமிழ்த் தேசத்தைப் பலமாக்கி எமது உரிமைகளை வலுவுள்ளதாக மாற்றுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியது அனைவரதும் கடமையாக இருக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எதிர்ப்பு அரசியல் அல்ல.இலங்கை ஒரு பன்முக நாடு.அந்த வகையில் ஒன்றிணைத்துச் செயற்படுத்துவதென்பது சமத்துவமான உரிமைகளை வழங்கப்படுகின்ற போதே சாத்தியமாகின்றது. 

அந்தவகையில் எமது உரிமைகளை வலுவுள்ளதாக்கவும், நாம் பலமுள்ளவர்களாக நிற்கிறோம் என்பதனை உரத்துச் சொல்வதற்கும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அவசியமானதொன்றாகும். 

இந்த வேளையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தொடர்பான விமர்சனங்கள், ஐயங்கள் இருக்கவே செய்கின்றன. 

இருப்பினும் அது தொடர்பாக கதைப்பதற்கும் கருத்துச் சொல்வதற்கும் இது உகந்த நேரம் அல்ல.அதற்குரிய காலம் கனிந்து வரும்.

இவை எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய தமிழ்த் தேசத்தினுடைய தலைவர்கள் என்று சொல்பவர்கள் தமிழ் மக்களை குழப்ப நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர். 

அந்தக் குழப்ப நிலை எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் நிச்சயமாக தமிழ்த் தேசமாக ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய பலத்தைச் சேர்ப்பதற்காக தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அவருடைய சங்கு சின்னத்திற்கு எதிராக புள்ளடி இட வேண்டும். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது எதிர்ப்பு அரசியல் அல்ல சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன்  தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல, இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.இன்று காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பிரிந்து கிடக்கும் எமது தமிழ்த் தேச உறவுகளை ஒன்றுபடுத்தி ஒரே தேசமாக திரட்டுவதற்கான களமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு அமைந்துள்ளது.அதனை உணர்ந்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கமும், அதன் ஊடாக அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ளதனையும் நாம் அறிவோம்.அந்தவிதத்தில் கடந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், மறுபுறத்தில் எமது தமிழ்த் தேசத்தைப் பலமாக்கி எமது உரிமைகளை வலுவுள்ளதாக மாற்றுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியது அனைவரதும் கடமையாக இருக்கின்றது.தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எதிர்ப்பு அரசியல் அல்ல.இலங்கை ஒரு பன்முக நாடு.அந்த வகையில் ஒன்றிணைத்துச் செயற்படுத்துவதென்பது சமத்துவமான உரிமைகளை வழங்கப்படுகின்ற போதே சாத்தியமாகின்றது. அந்தவகையில் எமது உரிமைகளை வலுவுள்ளதாக்கவும், நாம் பலமுள்ளவர்களாக நிற்கிறோம் என்பதனை உரத்துச் சொல்வதற்கும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அவசியமானதொன்றாகும். இந்த வேளையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தொடர்பான விமர்சனங்கள், ஐயங்கள் இருக்கவே செய்கின்றன. இருப்பினும் அது தொடர்பாக கதைப்பதற்கும் கருத்துச் சொல்வதற்கும் இது உகந்த நேரம் அல்ல.அதற்குரிய காலம் கனிந்து வரும்.இவை எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய தமிழ்த் தேசத்தினுடைய தலைவர்கள் என்று சொல்பவர்கள் தமிழ் மக்களை குழப்ப நிலைக்கு உள்ளாக்கியுள்ளனர். அந்தக் குழப்ப நிலை எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் நிச்சயமாக தமிழ்த் தேசமாக ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய பலத்தைச் சேர்ப்பதற்காக தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அவருடைய சங்கு சின்னத்திற்கு எதிராக புள்ளடி இட வேண்டும். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement