• Feb 15 2026

வடிகாலமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த மதில் - ஊழியர் படுகாயம்

Chithra / Jan 19th 2026, 2:29 pm
image

 

வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதில் இடிந்து விழுந்ததினால் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


காத்தான்குடி நகரசபை பிரிவில், புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். 


நேற்று மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்து குறித்த ஊழியர் படுகாயமடைந்தார்.


தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படாதிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


வடிகாலமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த மதில் - ஊழியர் படுகாயம்  வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதில் இடிந்து விழுந்ததினால் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்காத்தான்குடி நகரசபை பிரிவில், புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்து குறித்த ஊழியர் படுகாயமடைந்தார்.தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படாதிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement