சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு ஆதரவளித்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கும் பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் விசேட அறிக்கையொன்றின் ஊடாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நேற்று வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், வீதிப் போக்குவரத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தாக்குதலுக்குள்ளான நபருக்கும் குறித்த பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்த நபர் தனது தனிப்பட்ட தேவைக்காக லொறியொன்றில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.
வீதியவத்த தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது, அவருக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதுடன், தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் காயமடைந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த லொறியில் பயணித்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தகராறில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டியும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், காயமடைந்த நபரின் காயங்களைக் காணொளியாகப் பதிவு செய்த தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், அவர் பேரணிக்கு ஆதரவளித்ததால் தாக்கப்பட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியுள்ளதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விடயங்களை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கு வீரகுல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஞானசார தேரரின் பேரணிக்கு ஆதரவளித்தவர் தாக்கப்பட்டாரா பிக்குவின் காணொளியால் வெடித்த சர்ச்சை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு ஆதரவளித்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.குறித்த தாக்குதல் சம்பவத்திற்கும் பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் விசேட அறிக்கையொன்றின் ஊடாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.நேற்று வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், வீதிப் போக்குவரத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு உதவிய நபர் ஒருவர், குழுவொன்றினால் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது, தாக்குதலுக்குள்ளான நபருக்கும் குறித்த பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்த நபர் தனது தனிப்பட்ட தேவைக்காக லொறியொன்றில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.வீதியவத்த தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது, அவருக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதுடன், தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் காயமடைந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த லொறியில் பயணித்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தகராறில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டியும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், காயமடைந்த நபரின் காயங்களைக் காணொளியாகப் பதிவு செய்த தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், அவர் பேரணிக்கு ஆதரவளித்ததால் தாக்கப்பட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியுள்ளதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான விடயங்களை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கு வீரகுல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும், பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.