• Nov 14 2024

நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

Anaath / Jul 31st 2024, 11:06 am
image

நாங்கள் அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு எதிராகவே இருந்தோம் இன்றும் அவ்வாறே இத் தேர்தலில் அவ்வாறே நாங்கள் இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் (30) இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எப்போதுமே தேர்தலின் போது மற்றய கட்சிகள் கருத்துக்கள் அன்றைய காலத்தில் இருந்து வருவது வழக்கம்

மற்றும் நாங்கள் ஆரம்பித்ததிலிருந்து எங்களுடைய கட்சியை வலுப்படுத்தி கொண்டு வருகிறோம்.

நாங்கள் அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு எதிராகவே இருந்தோம், இன்றும் அவ்வாறே இத் தேர்தலில் அவ்வாறே நாங்கள் இருப்போம்.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு மக்களிடம் இருந்தே தவிர தமக்கிடையில் இல்லை

எனவே அன்றையகால கட்டத்தில் இருந்து மக்களிற்கு சேவை செய்தவர்களிற்கே மக்கள் ஆதரவாக இருப்பார்கள் எங்களுடைய கட்சியும் அது போன்றே என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகமானோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்தாலும் பலர் இருந்தனர் சிலர் இருந்தனர் என்று முக்கியமில்லை அங்கு நின்றவர்கள் பலர் நேற்றும் வந்திருந்தனர் இன்றும் வந்திருந்தனர்.இது அரசியல் தேர்தல் எனும் போது மாற்றங்கள் வரும் என அவர் தெரிவித்துள்ளார். 

இதே வேளை வேட்பாளரை தேர்வு செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்துப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கட்சியின்  பாதுகாப்பு, மற்றும் வேறு அபிவிருத்திகள்  என உள்ளதே தவிர  தனிப்பட்ட நபர் என்ற முறையில் யாரும் கூறுவது அல்ல. யாருக்கும் குறை கூறுவது இலகு சரியான முறையில் கருத்துக்களை முன் வைக்க முடியும். போட்டியிட்டு சரியான முறையில் வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு நாங்கள் அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு எதிராகவே இருந்தோம் இன்றும் அவ்வாறே இத் தேர்தலில் அவ்வாறே நாங்கள் இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் (30) இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எப்போதுமே தேர்தலின் போது மற்றய கட்சிகள் கருத்துக்கள் அன்றைய காலத்தில் இருந்து வருவது வழக்கம்மற்றும் நாங்கள் ஆரம்பித்ததிலிருந்து எங்களுடைய கட்சியை வலுப்படுத்தி கொண்டு வருகிறோம்.நாங்கள் அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு எதிராகவே இருந்தோம், இன்றும் அவ்வாறே இத் தேர்தலில் அவ்வாறே நாங்கள் இருப்போம்.ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு மக்களிடம் இருந்தே தவிர தமக்கிடையில் இல்லைஎனவே அன்றையகால கட்டத்தில் இருந்து மக்களிற்கு சேவை செய்தவர்களிற்கே மக்கள் ஆதரவாக இருப்பார்கள் எங்களுடைய கட்சியும் அது போன்றே என தெரிவித்துள்ளார்.அத்துடன் அதிகமானோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்தாலும் பலர் இருந்தனர் சிலர் இருந்தனர் என்று முக்கியமில்லை அங்கு நின்றவர்கள் பலர் நேற்றும் வந்திருந்தனர் இன்றும் வந்திருந்தனர்.இது அரசியல் தேர்தல் எனும் போது மாற்றங்கள் வரும் என அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை வேட்பாளரை தேர்வு செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்துப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கட்சியின்  பாதுகாப்பு, மற்றும் வேறு அபிவிருத்திகள்  என உள்ளதே தவிர  தனிப்பட்ட நபர் என்ற முறையில் யாரும் கூறுவது அல்ல. யாருக்கும் குறை கூறுவது இலகு சரியான முறையில் கருத்துக்களை முன் வைக்க முடியும். போட்டியிட்டு சரியான முறையில் வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement