• Sep 20 2024

யாழ்ப்பாணத்தில் யாரையும் மதம் மாற்ற நாங்கள் வரவில்லை-சாம் ராஜசூரியர் கருத்து!SamugamMedia

Sharmi / Mar 24th 2023, 2:36 pm
image

Advertisement

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன்  யாரையும்  மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை என வணக்கத்திற்குரிய சாம் ராஜசூரியர் தெரிவித்தார்

யாழில் நாம் யாரையும் மதம் மாற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை கடவுள் மனிதனுடைய உள்ளத்தை மாற்றுகின்றார்  மதம் மாறுமாறு நாம்   ஒருபோதும் போதித்ததில்லை கடவுள் எங்களுடைய உள்ளத்தை மாற்றுகின்றார் என்பதைத்தான் போதிக்கின்றோமே தவிர  மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டமும் நடத்தமுனையவில்லை,

போல் தினகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் இறை ஆசீர்வாத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன 

தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் அந்த நிகழ்வுகளை பிற் போட நேரிட்டிருக்கின்றது இந்தியாவிலிருந்து வந்த குழுவினரும் இன்று மதியம் இந்தியா பயணமாகவுள்ளார்கள் அவர்கள் சந்தோஷமாகத்தான் செல்கின்றார்கள் அவர்கள் மீண்டும் வருவார்கள் நாம் யாரையும் பகைக்கவில்லை யாருடனும் கோபப்படவும் இல்லை இறைவனை நேசிக்கின்றோம்.

இழைக்கப்பட்ட அநீதியை இறைவனிடம் முறையிட்டிருக்கின்றோம் இறைவன் பார்த்துக் கொள்வார்

எனினும், எதிர்காலத்தில் உரிய அனுமதிகளோடு இறை ஆராதனை நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் யாரையும் மதம் மாற்ற நாங்கள் வரவில்லை-சாம் ராஜசூரியர் கருத்துSamugamMedia தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன்  யாரையும்  மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை என வணக்கத்திற்குரிய சாம் ராஜசூரியர் தெரிவித்தார் யாழில் நாம் யாரையும் மதம் மாற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை கடவுள் மனிதனுடைய உள்ளத்தை மாற்றுகின்றார்  மதம் மாறுமாறு நாம்   ஒருபோதும் போதித்ததில்லை கடவுள் எங்களுடைய உள்ளத்தை மாற்றுகின்றார் என்பதைத்தான் போதிக்கின்றோமே தவிர  மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டமும் நடத்தமுனையவில்லை, போல் தினகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் இறை ஆசீர்வாத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன  தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் அந்த நிகழ்வுகளை பிற் போட நேரிட்டிருக்கின்றது இந்தியாவிலிருந்து வந்த குழுவினரும் இன்று மதியம் இந்தியா பயணமாகவுள்ளார்கள் அவர்கள் சந்தோஷமாகத்தான் செல்கின்றார்கள் அவர்கள் மீண்டும் வருவார்கள் நாம் யாரையும் பகைக்கவில்லை யாருடனும் கோபப்படவும் இல்லை இறைவனை நேசிக்கின்றோம். இழைக்கப்பட்ட அநீதியை இறைவனிடம் முறையிட்டிருக்கின்றோம் இறைவன் பார்த்துக் கொள்வார் எனினும், எதிர்காலத்தில் உரிய அனுமதிகளோடு இறை ஆராதனை நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement