• May 04 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாங்கள் உதாசீனம் செய்யவில்லை - செல்லப்பா குழந்தைவேல்

Tharun / Apr 10th 2024, 6:32 pm
image

Advertisement

நாங்கள் பொன்னாவெளியில் மண் அகழ்வுக்கு எதிராக 2500 கையொப்பங்கள் அடங்கிய 25 மகஜர்களை  நீதி மன்றத்துக்கு கொடுக்கும் போது சட்டவாளர் சங்கத்துக்கும் ஆளுநருக்கும், ஆயருக்கும், கிராமசேயையாளருக்கும் கொடுத்துள்ளோம் எனவும் . அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் கொடுத்து விட்டுத்தான் போனோம். என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் செல்லப்பா குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று(09) யாழில் நடந்த  ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இதுதொடர்பில் அமைச்சர் கிளிநொச்சியில் கலந்துரையாடுவதாக சொல்லியுள்ளார் . நாங்கள் அமைச்சரை உதாசீனம் செய்யவில்லை. இது எங்களினுடைய வாழ்வுக்கான போராட்டம். அங்கே கல்லை நூறடிக்கு அகழ்ந்தால் கடலின் தாளம் 18 அடி. எனவே 80 ஆடி  அகலப்படப்போகின்றது கடல் தண்ணீர் தானாக ஊறி 3 அடி  வெள்ளம் அல்லது 3 அடிக்கு தள்ளி நிற்கும். முதலாவது கட்டம் 350 ஹெக்டேயர் என்றால் 700 ஹெக்டேயர் அகழப்படப்போகிறது. 700 ஹெக்டேயரும்  100 அடியில் அகழ்தால் நிலைமை என்ன?. கடல் என்றால் கடலின் இறங்கி போகலாம். ஆனால் இதில் இறங்கி போக முடியாது. அந்த நீரானது ஊர்ந்து அடுத்த கிராமத்துக்கு சென்று நல்ல நீர் உவராகி போகும்.  விவசாய நடவடிக்கை எதுவும் செய்ய முடியாமல் நிலைமை மாறிவிடும். இதற்காகவே நாங்கள் எதிர்க்கின்றோம் . 

அத்துடன் பொன்னாவெளியில் 2012 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் இருந்தார்கள். மீள்குடியேற்றத்தை பொது 6, 7 குடும்பங்கள் இருந்தன. ஆனால் வீடமைத்து கொடுப்பதற்கு அங்கே  அப்போது இருந்த கிராமசேவகர் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால்தான் பேரவில்லுக்கு அவர்களை கொண்டுவந்திருத்தினர்.  அது பெரிய தூரம் இல்லை வெறும் அரை கிலோமீற்றர் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாங்கள் உதாசீனம் செய்யவில்லை - செல்லப்பா குழந்தைவேல் நாங்கள் பொன்னாவெளியில் மண் அகழ்வுக்கு எதிராக 2500 கையொப்பங்கள் அடங்கிய 25 மகஜர்களை  நீதி மன்றத்துக்கு கொடுக்கும் போது சட்டவாளர் சங்கத்துக்கும் ஆளுநருக்கும், ஆயருக்கும், கிராமசேயையாளருக்கும் கொடுத்துள்ளோம் எனவும் . அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் கொடுத்து விட்டுத்தான் போனோம். என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் செல்லப்பா குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.நேற்று(09) யாழில் நடந்த  ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுதொடர்பில் அமைச்சர் கிளிநொச்சியில் கலந்துரையாடுவதாக சொல்லியுள்ளார் . நாங்கள் அமைச்சரை உதாசீனம் செய்யவில்லை. இது எங்களினுடைய வாழ்வுக்கான போராட்டம். அங்கே கல்லை நூறடிக்கு அகழ்ந்தால் கடலின் தாளம் 18 அடி. எனவே 80 ஆடி  அகலப்படப்போகின்றது கடல் தண்ணீர் தானாக ஊறி 3 அடி  வெள்ளம் அல்லது 3 அடிக்கு தள்ளி நிற்கும். முதலாவது கட்டம் 350 ஹெக்டேயர் என்றால் 700 ஹெக்டேயர் அகழப்படப்போகிறது. 700 ஹெக்டேயரும்  100 அடியில் அகழ்தால் நிலைமை என்ன. கடல் என்றால் கடலின் இறங்கி போகலாம். ஆனால் இதில் இறங்கி போக முடியாது. அந்த நீரானது ஊர்ந்து அடுத்த கிராமத்துக்கு சென்று நல்ல நீர் உவராகி போகும்.  விவசாய நடவடிக்கை எதுவும் செய்ய முடியாமல் நிலைமை மாறிவிடும். இதற்காகவே நாங்கள் எதிர்க்கின்றோம் . அத்துடன் பொன்னாவெளியில் 2012 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் இருந்தார்கள். மீள்குடியேற்றத்தை பொது 6, 7 குடும்பங்கள் இருந்தன. ஆனால் வீடமைத்து கொடுப்பதற்கு அங்கே  அப்போது இருந்த கிராமசேவகர் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால்தான் பேரவில்லுக்கு அவர்களை கொண்டுவந்திருத்தினர்.  அது பெரிய தூரம் இல்லை வெறும் அரை கிலோமீற்றர் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement