• May 20 2024

இரத்தம் படிந்த இராணுவ கைகளோடு கைகோர்த்து செயற்பட நாம் தயாரில்லை..! முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 2:07 pm
image

Advertisement

இரத்தம் படிந்த இராணுவ கைகளோடு  நாம் கைகோர்த்துக்கொள்வது முன்னாள் போராளிகளுக்கு உதவ எந்தவிதமான உடன்பாடும் இல்லை என முன்னாள் போராளி  அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராளிகள் நலன்புரிச் சங்கம் தொடர்பில்  விசாரணை நடத்துமாறும் டிலன்அலஸ்  கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இராணுவத்தினர் வந்து சந்தித்துள்ளனர். அது தொடர்பான கருத்துக்கள் கூறவேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

போராளிகள் நலன்புரி சங்கம் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்து என்பது தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினருக்கு ஏற்கனவே அறிவித்தல் வழங்கி இருந்தோம். அதே நேரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர்கள். தொழில் வாய்ப்பே அல்லது வாழ்வாதாரத்துக்கே அல்லது அவர்களுடைய  தொடர் வாழ்கைக்கே உதவிகளை இந்த அரசாங்கம் செய்ய தவறியிருக்கின்றதை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று எம்முடைய போராளிகள் பலர் பிச்சை எடுக்கின்ற நிலமையில் இருக்கின்றார்கள் என பல சமூக ஊடகங்களில் காட்டிகொண்டு இருக்கின்றார்கள்.ஆகவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக போராளிகள் நலன்புரி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் கடமைகள் என்ன என்ன என்பதை குறிப்பிட்டு அதன்படி அவர்களுடைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதே நேரம் இந்த டிரான் அலஸ் அவர் சென்னது என்னவென்றால் புலிப்பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை  ஏமாற்றுகின்ற ஒரு அரசியல் நாடகமாக இந்த புலி வருது என்று தொடர்ந்து சொல்லப்படுகின்ற விடயங்களில் இதுவும் ஒரு விடயமாக நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஏன் என்று கேட்டால் 2009 இற்கு பிறகு இலங்கையிலே அல்லது அரசாங்கம் விடுதலைப் புலிகளை அனுமதிக்கவில்லை. ஆகவே விடுதலைப் புலிகள் மட்டும் தான் தடைசெய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகிறார்கள் ஒழிய விடுதலைபுலிகளில் இருந்தவர்கள் தடை செய்யப்பட்டவர்களாகவோ அல்லது மாவீரர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலிலோ உள்ளடக்கப்பட முடியாது.சட்டரீதியாக அவர்களை தண்டிக்க முடியாது.ஆகவே அதன் அடிப்படையில் தான் மரணித்தவர்களுக்கு சட்ட விலக்கு இருக்கிறது.

அதன் அடிப்படையிலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்கள் வந்து தங்களுடைய குடும்ப உறுப்பினர் என்று அவருக்கான அஞ்சலியை செய்வதற்கு உரித்து உண்டு . அதே போல போராளிகளாய் இருக்கின்றவர்களின் மரணம் தொடர்பில்  அவர்கள் எங்களுடைய குடும்பம், உறவினர்கள் அவர்களுடைய அஞ்சலியை செய்வதற்கு சட்ட ரீதியாக யாரும் தண்டிக்க முடியாது.

அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட நாம் ஈடுபடவில்லை.அதேநேரம் படைத்தரப்பு பொலிஸ் தரப்போடு இணைந்து பணியாற்றியவர்கள் பலர் மீளுருவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனவே எங்களுடைய வாழ்க்கையை நாம் சுயாதீனமாக முன்னெடுக்க இடம் கொடுக்க வேண்டும்.

இதேவேளை எங்களை விசாரனைகள் என்ற பேரில் கைது செய்வது தவறான கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் எந்தவொரு நல்லிணக்கமும் இடம்பெற போவதில்லை.அதேநேரம் நாம் கடந்த காலங்களில் சிறையில் இருந்து வந்த அடிப்படையில் இவர்கள் எங்களை கண்டித்ததன் அடிப்படையில் இவ்வித தீர்மானங்களும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்களின் விடயங்களில் அரசு கூடிய கவனம் செலுத்தி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கவேண்டும். இதேவேளை போரளிகளுக்கு அவர்களது பணியை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அரசியல்வாதிகளால் தாம் நாங்கள் ஆயுதம் தூக்கியவர்களாக மாறினோம். இந்நிலையில் இளைஞர்கள் ஆயுதம் தூக்க காரணமும் இவர்களே.

தொடர்ந்து வவுனியாவில் ஜோசப் முகாமில் இருந்து மேஜர் கமால் என்பவர் எங்களை சந்தித்து போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் உதவியை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் நான் அதை மறுதலித்திருந்தேன். ஏனெனில் கடந்த காலங்களில் இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் போர்குற்றம் குறித்தும் போராளிகளுக்கு தகுந்த தீர்மானம் வழங்கப்படாமையால் ஆகும்.இரத்தம் படிந்த அவர்களின் கைகளோடு நாம் கைகோர்த்துக்கொள்வது எமக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை என தெரிவித்துள்ளார்

இரத்தம் படிந்த இராணுவ கைகளோடு கைகோர்த்து செயற்பட நாம் தயாரில்லை. முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிப்பு.samugammedia இரத்தம் படிந்த இராணுவ கைகளோடு  நாம் கைகோர்த்துக்கொள்வது முன்னாள் போராளிகளுக்கு உதவ எந்தவிதமான உடன்பாடும் இல்லை என முன்னாள் போராளி  அரவிந்தன் தெரிவித்துள்ளார்.போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போராளிகள் நலன்புரிச் சங்கம் தொடர்பில்  விசாரணை நடத்துமாறும் டிலன்அலஸ்  கூறியுள்ளார். நேற்றைய தினம் இராணுவத்தினர் வந்து சந்தித்துள்ளனர். அது தொடர்பான கருத்துக்கள் கூறவேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.போராளிகள் நலன்புரி சங்கம் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்து என்பது தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினருக்கு ஏற்கனவே அறிவித்தல் வழங்கி இருந்தோம். அதே நேரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர்கள். தொழில் வாய்ப்பே அல்லது வாழ்வாதாரத்துக்கே அல்லது அவர்களுடைய  தொடர் வாழ்கைக்கே உதவிகளை இந்த அரசாங்கம் செய்ய தவறியிருக்கின்றதை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.இன்று எம்முடைய போராளிகள் பலர் பிச்சை எடுக்கின்ற நிலமையில் இருக்கின்றார்கள் என பல சமூக ஊடகங்களில் காட்டிகொண்டு இருக்கின்றார்கள்.ஆகவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக போராளிகள் நலன்புரி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.அதன் கடமைகள் என்ன என்ன என்பதை குறிப்பிட்டு அதன்படி அவர்களுடைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதே நேரம் இந்த டிரான் அலஸ் அவர் சென்னது என்னவென்றால் புலிப்பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை  ஏமாற்றுகின்ற ஒரு அரசியல் நாடகமாக இந்த புலி வருது என்று தொடர்ந்து சொல்லப்படுகின்ற விடயங்களில் இதுவும் ஒரு விடயமாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஏன் என்று கேட்டால் 2009 இற்கு பிறகு இலங்கையிலே அல்லது அரசாங்கம் விடுதலைப் புலிகளை அனுமதிக்கவில்லை. ஆகவே விடுதலைப் புலிகள் மட்டும் தான் தடைசெய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகிறார்கள் ஒழிய விடுதலைபுலிகளில் இருந்தவர்கள் தடை செய்யப்பட்டவர்களாகவோ அல்லது மாவீரர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலிலோ உள்ளடக்கப்பட முடியாது.சட்டரீதியாக அவர்களை தண்டிக்க முடியாது.ஆகவே அதன் அடிப்படையில் தான் மரணித்தவர்களுக்கு சட்ட விலக்கு இருக்கிறது.அதன் அடிப்படையிலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்கள் வந்து தங்களுடைய குடும்ப உறுப்பினர் என்று அவருக்கான அஞ்சலியை செய்வதற்கு உரித்து உண்டு . அதே போல போராளிகளாய் இருக்கின்றவர்களின் மரணம் தொடர்பில்  அவர்கள் எங்களுடைய குடும்பம், உறவினர்கள் அவர்களுடைய அஞ்சலியை செய்வதற்கு சட்ட ரீதியாக யாரும் தண்டிக்க முடியாது.அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட நாம் ஈடுபடவில்லை.அதேநேரம் படைத்தரப்பு பொலிஸ் தரப்போடு இணைந்து பணியாற்றியவர்கள் பலர் மீளுருவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனவே எங்களுடைய வாழ்க்கையை நாம் சுயாதீனமாக முன்னெடுக்க இடம் கொடுக்க வேண்டும்.இதேவேளை எங்களை விசாரனைகள் என்ற பேரில் கைது செய்வது தவறான கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் எந்தவொரு நல்லிணக்கமும் இடம்பெற போவதில்லை.அதேநேரம் நாம் கடந்த காலங்களில் சிறையில் இருந்து வந்த அடிப்படையில் இவர்கள் எங்களை கண்டித்ததன் அடிப்படையில் இவ்வித தீர்மானங்களும் வழங்கப்படவில்லை.இந்நிலையில் தமிழ் மக்களின் விடயங்களில் அரசு கூடிய கவனம் செலுத்தி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கவேண்டும். இதேவேளை போரளிகளுக்கு அவர்களது பணியை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அரசியல்வாதிகளால் தாம் நாங்கள் ஆயுதம் தூக்கியவர்களாக மாறினோம். இந்நிலையில் இளைஞர்கள் ஆயுதம் தூக்க காரணமும் இவர்களே.தொடர்ந்து வவுனியாவில் ஜோசப் முகாமில் இருந்து மேஜர் கமால் என்பவர் எங்களை சந்தித்து போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் உதவியை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.ஆனால் நான் அதை மறுதலித்திருந்தேன். ஏனெனில் கடந்த காலங்களில் இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் போர்குற்றம் குறித்தும் போராளிகளுக்கு தகுந்த தீர்மானம் வழங்கப்படாமையால் ஆகும்.இரத்தம் படிந்த அவர்களின் கைகளோடு நாம் கைகோர்த்துக்கொள்வது எமக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement