பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் பலம்மிக்க கட்சியாக எமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.கட்சியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளையம் ஆரம்பித்துள்ளோம்.
பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கட்சிக்குள் உறுப்பினர் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
பொதுஜன பெரமுன வீழ்ச்சியடையவில்லை. வீடுகளுக்கு தீ வைத்தல் கொலை செய்தல் போன்ற வன்முறையில் ஈடுபடுவது எமது கட்சியின் கொள்கை அல்ல.
நாம் உறுப்பினர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துபவர்களும் அல்ல. வரலாற்றில் தேர்தல்களில் நாம் வாக்களிப்பு மோசடிகளில் ஈடுபடுபவர்களும் அல்ல.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.
நாட்டில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று ஜனநாயக உரிமை தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
ஏனென்றால் மனித உரிமைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு மாத்திரமே பேசமுடியும்.
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது கட்சியின் தலைவரே எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். மொட்டு கட்சி எம்.பி தெரிவிப்பு. பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.எதிர்வரும் தேர்தலில் பலம்மிக்க கட்சியாக எமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.கட்சியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளையம் ஆரம்பித்துள்ளோம்.பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கட்சிக்குள் உறுப்பினர் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர். பொதுஜன பெரமுன வீழ்ச்சியடையவில்லை. வீடுகளுக்கு தீ வைத்தல் கொலை செய்தல் போன்ற வன்முறையில் ஈடுபடுவது எமது கட்சியின் கொள்கை அல்ல.நாம் உறுப்பினர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துபவர்களும் அல்ல. வரலாற்றில் தேர்தல்களில் நாம் வாக்களிப்பு மோசடிகளில் ஈடுபடுபவர்களும் அல்ல.மஹிந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.நாட்டில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று ஜனநாயக உரிமை தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் மனித உரிமைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு மாத்திரமே பேசமுடியும். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது கட்சியின் தலைவரே எனவும் அவர் தெரிவித்தார்.