• Nov 24 2024

எங்களிடம் 'டீல்' அரசியல் இல்லை! - சஜித் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Jan 3rd 2024, 8:17 pm
image

"நாங்கள் எவருடனும் 'டீல்' அரசியல் செய்யவில்லை. அரச கட்டமைப்பில் நிலவி வரும் ஊழல், மோசடி, திருட்டு முற்றிலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புத்தாண்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாலும், 2 கோடி 20 இலட்சம் மக்கள் மிகவும் அவலமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. இந்நேரத்தில் மனிதனை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்வதை விடுத்து மனிதனை வாழ வைப்பதே எமது கடமையாக இருக்க வேண்டும்.

இந்நாட்டு மக்கள் யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது. தாங்களாகவே எழுந்து நிற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அரச கட்டமைப்பில் நிலவி வரும் ஊழல், மோசடி, திருட்டு முற்றிலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசு பல்வேறு கொடுக்கல் - வாங்கல்கள் மூலம் வங்குரோத்து நாட்டில் இருந்து கொண்டே டொலர்களைக் கூட திருடி வருகின்றது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கடந்த விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டு குடும்பமாக மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தினாலும், வீதிகளில் செல்லும் ஏழைகள் உட்பட அனைத்து குடிமக்களும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மதிப்பீட்டின் பிரகாரம், குடும்ப அடிப்படையிலான குடும்ப அலகுகளில் 60 சதவீத வருமானம் குறைந்துள்ளது. 90 சதவீத குடும்ப அலகுகளின் செலவினம் அதிகரித்துள்ளது.

இந்த வங்குரோத்து நிலையிலும் சுமார் 3.4 சதவீதமானோர்களின் வாழ்க்கை மட்டம் உயர் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் சமூகத்தின் உயர் வகுப்பினர்." - என்றார்.

எங்களிடம் 'டீல்' அரசியல் இல்லை - சஜித் தெரிவிப்பு.samugammedia "நாங்கள் எவருடனும் 'டீல்' அரசியல் செய்யவில்லை. அரச கட்டமைப்பில் நிலவி வரும் ஊழல், மோசடி, திருட்டு முற்றிலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"புத்தாண்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாலும், 2 கோடி 20 இலட்சம் மக்கள் மிகவும் அவலமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. இந்நேரத்தில் மனிதனை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்வதை விடுத்து மனிதனை வாழ வைப்பதே எமது கடமையாக இருக்க வேண்டும்.இந்நாட்டு மக்கள் யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது. தாங்களாகவே எழுந்து நிற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அரச கட்டமைப்பில் நிலவி வரும் ஊழல், மோசடி, திருட்டு முற்றிலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.தற்போதைய அரசு பல்வேறு கொடுக்கல் - வாங்கல்கள் மூலம் வங்குரோத்து நாட்டில் இருந்து கொண்டே டொலர்களைக் கூட திருடி வருகின்றது.அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கடந்த விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டு குடும்பமாக மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தினாலும், வீதிகளில் செல்லும் ஏழைகள் உட்பட அனைத்து குடிமக்களும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மதிப்பீட்டின் பிரகாரம், குடும்ப அடிப்படையிலான குடும்ப அலகுகளில் 60 சதவீத வருமானம் குறைந்துள்ளது. 90 சதவீத குடும்ப அலகுகளின் செலவினம் அதிகரித்துள்ளது.இந்த வங்குரோத்து நிலையிலும் சுமார் 3.4 சதவீதமானோர்களின் வாழ்க்கை மட்டம் உயர் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் சமூகத்தின் உயர் வகுப்பினர்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement