புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வீதிக்கு வீதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (22) திருகோணமலை, மூதூரில் இடம்பெற்றது. இதன் பின்னர் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் ஞா.அ.ரஜிவ் லியோன் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது முன்னாள் போராளிகள் என்கின்ற வகையில் நாம் செல்கின்ற இடங்களில் மக்கள் அமோக ஆதரவினை தருகின்றனர். நாம் எமது நகர்வுகளை சரியான முறையில் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றோம். எமது உறவுகளுக்கு நாம் நிச்சயமாக உதவுவோம்.
எமது நோக்கம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். எமது மக்கள் அன்றாட வாழ்வாதாரம் , உணவு உறையுள் இன்றி மிகவும் அவதியுற்று காணப்படுகின்றனர். மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும்போது தாழ்ந்த சமூகமாக வாழ்கின்றனர். இவர்களுக்காக கஷ்டப்பட்டவர்கள் நாங்கள் இதற்காக 30 வருட போராட்டத்தில் இணைந்து கொண்டவர்கள்.
எமது மக்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் இம்முறை எமக்கான சந்தர்ப்பத்தை தாருங்கள். உங்களுக்காக எமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் இன்று நாங்கள் அரசியல் ரீதியாக முன் வந்திருக்கின்றோம். இனி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் இன்று அரசியல் களத்தில் இறங்கி இருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ நாங்களும் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.
எமது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முன் வரவேண்டும். நாங்கள் பெரிதாக படிக்கவில்லை இருப்பினும் சாதித்துக் காட்டியவர்கள்.எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள் நாங்கள் செய்து காட்டுவோம் எனக் குறிப்பிட்டார்.
நாங்கள் பெரிதாக படிக்கவில்லை இருப்பினும் சாதித்துக் காட்டியவர்கள் -ஞா.அ.ரஜிவ் லியோன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வீதிக்கு வீதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (22) திருகோணமலை, மூதூரில் இடம்பெற்றது. இதன் பின்னர் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் ஞா.அ.ரஜிவ் லியோன் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது முன்னாள் போராளிகள் என்கின்ற வகையில் நாம் செல்கின்ற இடங்களில் மக்கள் அமோக ஆதரவினை தருகின்றனர். நாம் எமது நகர்வுகளை சரியான முறையில் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றோம். எமது உறவுகளுக்கு நாம் நிச்சயமாக உதவுவோம்.எமது நோக்கம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். எமது மக்கள் அன்றாட வாழ்வாதாரம் , உணவு உறையுள் இன்றி மிகவும் அவதியுற்று காணப்படுகின்றனர். மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும்போது தாழ்ந்த சமூகமாக வாழ்கின்றனர். இவர்களுக்காக கஷ்டப்பட்டவர்கள் நாங்கள் இதற்காக 30 வருட போராட்டத்தில் இணைந்து கொண்டவர்கள்.எமது மக்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் இம்முறை எமக்கான சந்தர்ப்பத்தை தாருங்கள். உங்களுக்காக எமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் இன்று நாங்கள் அரசியல் ரீதியாக முன் வந்திருக்கின்றோம். இனி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் இன்று அரசியல் களத்தில் இறங்கி இருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ நாங்களும் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.எமது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முன் வரவேண்டும். நாங்கள் பெரிதாக படிக்கவில்லை இருப்பினும் சாதித்துக் காட்டியவர்கள்.எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள் நாங்கள் செய்து காட்டுவோம் எனக் குறிப்பிட்டார்.