• May 20 2024

மக்கள் ஆணை எமக்கே உண்டு! - 13ஐ மட்டும் கோர முடியாது! சம்பந்தன் திட்டவட்டம் samugammedia

Chithra / Jul 12th 2023, 11:20 am
image

Advertisement

"தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் உள்ளது. அதனை நாம் மீற முடியாது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம் இந்தியாவிடம் கோர முடியாது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

"தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மாத்திரமே உள்ளது. நாம் மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முடியாது. 

13ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவைக் கோர முடியாது. தமிழ் மக்கள் அதற்கு ஆணை தரவில்லை. இந்தியாவே அதனைத் தாண்டி - கூட்டுறவு சமஷ்டி தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளது. 

இவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மக்கள் ஆணையுள்ள நாம் கோர முடியாது.

ஏனைய கட்சிகள் எவ்வாறு வேண்டுமானாலும் செயற்படலாம். மக்கள் ஆணையுள்ள நாம் அவ்வாறு செயற்பட முடியாது" - என்று திட்டவட்டமாக சம்பந்தன் குறிப்பிட்டார் எனச் சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கள் ஆணை எமக்கே உண்டு - 13ஐ மட்டும் கோர முடியாது சம்பந்தன் திட்டவட்டம் samugammedia "தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் உள்ளது. அதனை நாம் மீற முடியாது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம் இந்தியாவிடம் கோர முடியாது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இரா.சம்பந்தனுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்."தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மாத்திரமே உள்ளது. நாம் மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவைக் கோர முடியாது. தமிழ் மக்கள் அதற்கு ஆணை தரவில்லை. இந்தியாவே அதனைத் தாண்டி - கூட்டுறவு சமஷ்டி தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளது. இவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மக்கள் ஆணையுள்ள நாம் கோர முடியாது.ஏனைய கட்சிகள் எவ்வாறு வேண்டுமானாலும் செயற்படலாம். மக்கள் ஆணையுள்ள நாம் அவ்வாறு செயற்பட முடியாது" - என்று திட்டவட்டமாக சம்பந்தன் குறிப்பிட்டார் எனச் சுமந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement