இலங்கையில் இடம்பெற்று வருகின்ற தற்போதைய போராட்டத்தில் புறக்கணிக்க எவரும் இல்லை என ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
எனவே இன்று சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தி உள்வாங்கிக் கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
தற்போதைய அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை.
தற்போதைய போராட்டத்தில் சமூகத்தில் யாரையும் புறக்கணிக்க முடியாது.
ஜே.வி.பி.யாக இருந்தபோது சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு மட்டுமே அதில் உள்வாங்கப்பட்டது.
எனினும் தற்போது முற்போக்கான விடயங்களைச் செய்யத் தயாராக இருக்கும் அனைத்துக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தியாக உள்வாங்குவதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை. ஜே.வி.பி அழைப்பு. இலங்கையில் இடம்பெற்று வருகின்ற தற்போதைய போராட்டத்தில் புறக்கணிக்க எவரும் இல்லை என ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.எனவே இன்று சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தி உள்வாங்கிக் கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை.தற்போதைய போராட்டத்தில் சமூகத்தில் யாரையும் புறக்கணிக்க முடியாது.ஜே.வி.பி.யாக இருந்தபோது சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு மட்டுமே அதில் உள்வாங்கப்பட்டது.எனினும் தற்போது முற்போக்கான விடயங்களைச் செய்யத் தயாராக இருக்கும் அனைத்துக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தியாக உள்வாங்குவதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.