• Nov 17 2024

எதிர்வரும் பாராளுமன்றத்தில் பலமான அணியாக நாம் இடம்பெறவேண்டும்- மனோ கணேசன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Nov 7th 2024, 10:45 am
image

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி, பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நிலையில் பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எமது அணி, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும்.

எம்மை நாமே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. 

இந்த வரலாற்று சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். வரலாறு தந்திருக்கும் வாய்ப்பை நாம் தவற விடகூடாது.

ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனை போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை பார்த்து இருக்கிறேன். இப்போதும் பார்க்கிறேன். இந்த பசப்பு வார்த்தைகளில் நமது மக்கள் ஏமாந்து விட கூடாது. 

உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம். 

ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.

ஆகவே, ஏழு மாவட்டங்களில் போட்டி இடும் எமது பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் நாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும். இதை மனதில் கொண்டு நமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. இடை அடுத்து நாடு எழுச்சியும் பெறலாம். வீழ்ச்சியும் அடையலாம். இவற்றை பெரும்பாலும் பெரும்பான்மை மக்கள் தெரிவு செய்யும் பெரும்பான்மை கட்சிகளே தீர்மானிக்க போகின்றன.

இந்த சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.

எம் தேவைகள் பற்றி, எம் இருப்பு பற்றி, எம் அபிலாசைகள் பற்றி, நாம்தான் பேச வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். இன்று தேனொழுக பேசும் வேறு எவரும் எம்மை பற்றி பேச மாட்டார்கள். உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம்.

ஆகவே, பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டி இடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பத்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் முகமாக வாக்களிக்கும் படி மக்களை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.


எதிர்வரும் பாராளுமன்றத்தில் பலமான அணியாக நாம் இடம்பெறவேண்டும்- மனோ கணேசன் சுட்டிக்காட்டு. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி, பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நிலையில் பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எமது அணி, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும்.எம்மை நாமே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. இந்த வரலாற்று சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். வரலாறு தந்திருக்கும் வாய்ப்பை நாம் தவற விடகூடாது.ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனை போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை பார்த்து இருக்கிறேன். இப்போதும் பார்க்கிறேன். இந்த பசப்பு வார்த்தைகளில் நமது மக்கள் ஏமாந்து விட கூடாது. உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம். ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும் எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.ஆகவே, ஏழு மாவட்டங்களில் போட்டி இடும் எமது பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் நாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும். இதை மனதில் கொண்டு நமது மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. இடை அடுத்து நாடு எழுச்சியும் பெறலாம். வீழ்ச்சியும் அடையலாம். இவற்றை பெரும்பாலும் பெரும்பான்மை மக்கள் தெரிவு செய்யும் பெரும்பான்மை கட்சிகளே தீர்மானிக்க போகின்றன.இந்த சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எம் தேவைகள் பற்றி, எம் இருப்பு பற்றி, எம் அபிலாசைகள் பற்றி, நாம்தான் பேச வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். இன்று தேனொழுக பேசும் வேறு எவரும் எம்மை பற்றி பேச மாட்டார்கள். உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம்.ஆகவே, பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டி இடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பத்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் முகமாக வாக்களிக்கும் படி மக்களை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement