• Nov 24 2024

கடன் வாங்கும் மனோ நிலையில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும்- நாடாளுமன்றில் ரணில்

Tharun / Feb 7th 2024, 7:05 pm
image

இரு தரப்பு கடன்கள் தொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தனியார்துறை கடன் கொடுப்போர் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இந்த வருட ஆறு மாதத்தில் கடன் மறுசீரமைப்பை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர நாங்கள் நினைக்கின்றோம். 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பமானது. இதன் போது தனது கொள்கைப்பிரகடன உரையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது பொருளாதாரத்தை ஒரு சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு அடிப்படையாக  இந்த விடயம் அமையும். அதே போல இந்த கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான முக்கியமான கட்டமாக இது இருக்கும். இந்த வருடதில் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேர்கணிய பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியும் என்று IMF,  உலக வங்கி,  ஆசிய அபிருத்தி வாங்கி போன்றவை எதிர்வு கூறியிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு நூற்றுக்கு இந்து வீதம்   இந்த  பொருளாதார வளர்ச்சியை  அதிகரித்து கொள்ள நடவடிக்கையை  மேற்கொள்வோம்.

2022 ஆம் ஆண்டு பெரும் அக்கினியில் வீழ்த்திருந்த  நாட்டை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் நாங்கள் மேற்கொண்டோம். 2021 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு சில நல்ல விடயங்கள் நடந்திருக்கின்றன.  2023 ஆம் ஆண்டில் நாங்கள் சகல துறைகளிலும் நாங்கள் வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். 2025 ஆம் ஆண்டில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதே பயணப்பாதையில் நாங்கள் சென்றால் 2025 ஆம் ஆண்டு இதை விட சிறப்பானதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கும் மனோ நிலையில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும்- நாடாளுமன்றில் ரணில் இரு தரப்பு கடன்கள் தொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தனியார்துறை கடன் கொடுப்போர் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இந்த வருட ஆறு மாதத்தில் கடன் மறுசீரமைப்பை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர நாங்கள் நினைக்கின்றோம். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பமானது. இதன் போது தனது கொள்கைப்பிரகடன உரையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பொருளாதாரத்தை ஒரு சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு அடிப்படையாக  இந்த விடயம் அமையும். அதே போல இந்த கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான முக்கியமான கட்டமாக இது இருக்கும். இந்த வருடதில் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேர்கணிய பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியும் என்று IMF,  உலக வங்கி,  ஆசிய அபிருத்தி வாங்கி போன்றவை எதிர்வு கூறியிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு நூற்றுக்கு இந்து வீதம்   இந்த  பொருளாதார வளர்ச்சியை  அதிகரித்து கொள்ள நடவடிக்கையை  மேற்கொள்வோம்.2022 ஆம் ஆண்டு பெரும் அக்கினியில் வீழ்த்திருந்த  நாட்டை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் நாங்கள் மேற்கொண்டோம். 2021 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு சில நல்ல விடயங்கள் நடந்திருக்கின்றன.  2023 ஆம் ஆண்டில் நாங்கள் சகல துறைகளிலும் நாங்கள் வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். 2025 ஆம் ஆண்டில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதே பயணப்பாதையில் நாங்கள் சென்றால் 2025 ஆம் ஆண்டு இதை விட சிறப்பானதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement