• May 19 2025

எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் சேவைகளை முன்னெடுப்போம்; சஜித் சுட்டிக்காட்டு..!

Sharmi / May 19th 2025, 12:37 pm
image

பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிலவிக்கையில்,

பெரும்பான்மையை இழந்துள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் பலத்தை நிலைநாட்டுவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. குறைந்தபட்சம் உப்பையேனும் உரிய முறையில் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியாது போயுள்ளது.

இந்த நிலையில் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சியை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறது.

எதிர்க்கட்சி பெரும்பான்மை வகிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான உச்சபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் சேவைகளை முன்னெடுப்போம்; சஜித் சுட்டிக்காட்டு. பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிலவிக்கையில்,பெரும்பான்மையை இழந்துள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் பலத்தை நிலைநாட்டுவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது.மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. குறைந்தபட்சம் உப்பையேனும் உரிய முறையில் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியாது போயுள்ளது.இந்த நிலையில் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம். ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சியை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறது.எதிர்க்கட்சி பெரும்பான்மை வகிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான உச்சபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement