• May 08 2024

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம்..! மொட்டு அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 31st 2023, 7:50 am
image

Advertisement

 

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்கு உள்ளது ன பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இடைக்கால ஜனாதிபதியாகவே அவரை தெரிவு செய்தோம். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் அவரது கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற்பட்ட காலத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை தடுப்பதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்குண்டு.

பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளோம்.

கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம். என தெரிவித்துள்ளார்.


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். மொட்டு அதிரடி அறிவிப்பு samugammedia  மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்கு உள்ளது ன பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.இடைக்கால ஜனாதிபதியாகவே அவரை தெரிவு செய்தோம். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் அவரது கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற்பட்ட காலத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.மத்திய வங்கி பிணைமுறி மோசடியை தடுப்பதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்குண்டு.பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளோம்.கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement