ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இமாம் குழு தகவல் அறிந்து கொள்வதற்காகவே அந்த குழு நியமிக்கப்பட்டது.
அது உத்தியோகபூர்வ விசாரணை குழுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் அந்த குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட தேவைகளுக்காக எங்களின் வேலைதிட்டங்களையும் விசாரணைகளையும் மாற்றிகொள்ள மாட்டோம். முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
இமாம் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். - விஜித அறிவிப்பு ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். இமாம் குழு தகவல் அறிந்து கொள்வதற்காகவே அந்த குழு நியமிக்கப்பட்டது. அது உத்தியோகபூர்வ விசாரணை குழுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் அந்த குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட தேவைகளுக்காக எங்களின் வேலைதிட்டங்களையும் விசாரணைகளையும் மாற்றிகொள்ள மாட்டோம். முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.