• Apr 28 2025

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம்! - ஜனாதிபதி உறுதி

Chithra / Apr 27th 2025, 9:27 am
image

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்  யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு  மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன்.

அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும். விசேட கருத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம். 

இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம். முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலம் நிர்மாணிப்பு பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்போம் எனவும் ஜனாதிபதி   உறுதியளித்தார்.

மொழி,கலாச்சாரம் என்ற அடிப்படையில் எவரையும் வேறுப்படுத்த போவதில்லை. இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு. என்றார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் - ஜனாதிபதி உறுதி யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்  யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு  மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன்.அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும். விசேட கருத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம். இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம். முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலம் நிர்மாணிப்பு பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்போம் எனவும் ஜனாதிபதி   உறுதியளித்தார்.மொழி,கலாச்சாரம் என்ற அடிப்படையில் எவரையும் வேறுப்படுத்த போவதில்லை. இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு. என்றார்.புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement