• Jul 12 2025

“துக்கத்தின் தருணத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக நிற்போம்” - விமான விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுர இரங்கல்...!

shanuja / Jun 13th 2025, 1:50 am
image

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்திற்கு  இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. 


விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று 

மாநில அரசு  தெரிவித்துள்ள  நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, 


“இந்த ஆழ்ந்த துக்கத்தின் தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.” “பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.”


இந்த விபத்தில் பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன, இருப்பினும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. - என்றுள்ளது. 


குஜராத் - அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து இந்தியாவை மட்டுமன்றிய உலக நாடுகளையும் உலுக்கிய சம்பவமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“துக்கத்தின் தருணத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக நிற்போம்” - விமான விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுர இரங்கல். இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்திற்கு  இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இரங்கலைத் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு  தெரிவித்துள்ள  நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, “இந்த ஆழ்ந்த துக்கத்தின் தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.” “பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.”இந்த விபத்தில் பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன, இருப்பினும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. - என்றுள்ளது. குஜராத் - அகமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து இந்தியாவை மட்டுமன்றிய உலக நாடுகளையும் உலுக்கிய சம்பவமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now