• Jan 21 2025

எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி வாகை சூடுவோம்...! மஹிந்த சூளுரை...!

Sharmi / Mar 16th 2024, 10:06 am
image

எதிர்வரும் தேர்தல்களில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை வெற்றிகரமாக முகங்கொடுக்க பிரதான கட்சிகள் தற்போது தயாராகி வருகின்றன.

அந்தவகையில்,  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவும் தற்போது தமது தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. 

இந்நிலையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி வாகை சூடுவோம். மஹிந்த சூளுரை. எதிர்வரும் தேர்தல்களில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை வெற்றிகரமாக முகங்கொடுக்க பிரதான கட்சிகள் தற்போது தயாராகி வருகின்றன.அந்தவகையில்,  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவும் தற்போது தமது தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement