• May 20 2024

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு!samugammedia

Sharmi / Apr 5th 2023, 3:05 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தான் கோருகின்றனர் என அப்பட்டமான இனவாத பொய்யுரைப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர்களை பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தங்களது மறுக்கப்பட்ட தன்னாட்சி உரிமையை வேண்டி 74 ஆண்டுகளாக சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்ற அரசியல் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் மாகாணங்களில்  பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இது ஒவ்வொரு தேர்தல்களிலும் நிரூபணமாகியுள்ளது இந்த உண்மையை மறைத்து இனவாதத்தை தூண்டுகிறார் வீரசேகர.

1952,1956,1960 ஆம்  ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் மக்களை நோக்கி சோறா? சமஷ்டியா? வேண்டும் என கேட்ட போது சுதந்திர சமஷ்டியே வேண்டும் என பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கினர் இதனை இலங்கையின் தேர்தல் வரலாறு தெளிவாக கூறுகிறது.

1977 இல்  நடைபெற்ற தேர்தலில்   வடகிழக்கு மாகாணங்களில்  தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முன் வைத்த  சமஸ்டி கோரிக்கையை தாண்டி தனிநாட்டுக் கோரிக்கைக்கு 99% மக்கள் ஆணை வழங்கினார்கள்  உண்மையாக தனி நாட்டிற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே அமைந்தது.  1977  இல்  தமிழர் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.

சுதந்திர தாகத்துடன் தொடர்ந்து  தங்களது அபிலாசையை மக்கள் ஆணை மூலம் வெளிப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை இழிபுபடுத்தி இனவாத தீயை வளர்த்து அதிகாரத்தை பெற நினைக்கும் பித்தலாட்ட நடவடிக்கைகளை சரத் வீரசேகர கைவிட வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர- சபா.குகதாஸ் குற்றச்சாட்டுsamugammedia பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தான் கோருகின்றனர் என அப்பட்டமான இனவாத பொய்யுரைப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தமிழர்களை பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தங்களது மறுக்கப்பட்ட தன்னாட்சி உரிமையை வேண்டி 74 ஆண்டுகளாக சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்ற அரசியல் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் மாகாணங்களில்  பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இது ஒவ்வொரு தேர்தல்களிலும் நிரூபணமாகியுள்ளது இந்த உண்மையை மறைத்து இனவாதத்தை தூண்டுகிறார் வீரசேகர.1952,1956,1960 ஆம்  ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் மக்களை நோக்கி சோறா சமஷ்டியா வேண்டும் என கேட்ட போது சுதந்திர சமஷ்டியே வேண்டும் என பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கினர் இதனை இலங்கையின் தேர்தல் வரலாறு தெளிவாக கூறுகிறது.1977 இல்  நடைபெற்ற தேர்தலில்   வடகிழக்கு மாகாணங்களில்  தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முன் வைத்த  சமஸ்டி கோரிக்கையை தாண்டி தனிநாட்டுக் கோரிக்கைக்கு 99% மக்கள் ஆணை வழங்கினார்கள்  உண்மையாக தனி நாட்டிற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே அமைந்தது.  1977  இல்  தமிழர் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.சுதந்திர தாகத்துடன் தொடர்ந்து  தங்களது அபிலாசையை மக்கள் ஆணை மூலம் வெளிப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை இழிபுபடுத்தி இனவாத தீயை வளர்த்து அதிகாரத்தை பெற நினைக்கும் பித்தலாட்ட நடவடிக்கைகளை சரத் வீரசேகர கைவிட வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement