• Mar 16 2025

கொக்குவில் இந்து முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Chithra / Mar 15th 2025, 1:20 pm
image

 

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து முன்பள்ளியின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் தலைவர் ச.பிரதாபன் தலைமையில் 

கொக்குவில் இந்து கல்லூரியின் "பஞ்சலிங்கம் அரங்கில்" வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா சிவகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். 

இதன் போது விருந்தினர்களும் மாணவர்களும் மங்கள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது. 

குறிப்பாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றஇருந்தன.

தொடர்ந்து விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்று நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கொக்குவில் இந்து முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து முன்பள்ளியின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் தலைவர் ச.பிரதாபன் தலைமையில் கொக்குவில் இந்து கல்லூரியின் "பஞ்சலிங்கம் அரங்கில்" வெகு விமர்சையாக நடைபெற்றது.இந் நிகழ்வில் யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா சிவகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன் போது விருந்தினர்களும் மாணவர்களும் மங்கள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது. குறிப்பாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றஇருந்தன.தொடர்ந்து விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்று நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement