• Jun 22 2024

மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு...!

Sharmi / Jun 14th 2024, 3:59 pm
image

Advertisement

மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த 20 வயதான சிவகரன் அக்சயன் என்ற மாணவன் இன்று(14) காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரித்துவிட்டு இன்று(14) காலை வரும்போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த 20 வயதான சிவகரன் அக்சயன் என்ற மாணவன் இன்று(14) காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்.அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரித்துவிட்டு இன்று(14) காலை வரும்போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement