• Sep 20 2024

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ள உறுதிமொழி - ராமேஸ்வரன் தெரிவித்த விடயம் என்ன!

Tamil nila / Feb 12th 2023, 11:40 am
image

Advertisement

மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்துவதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.


இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாகவும் அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருப்பதாக மருதபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


அந்தவகையில் இலங்கைக்கு வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சு நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடியதாகவும் மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுபாலமாக செயற்படுவேன் என அண்ணாமல் தெரிவித்திருந்தாக மருதபாண்டி ராமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ள உறுதிமொழி - ராமேஸ்வரன் தெரிவித்த விடயம் என்ன மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்துவதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாகவும் அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருப்பதாக மருதபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.அந்தவகையில் இலங்கைக்கு வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சு நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடியதாகவும் மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுபாலமாக செயற்படுவேன் என அண்ணாமல் தெரிவித்திருந்தாக மருதபாண்டி ராமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement