• May 18 2024

சாலகவின் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகருக்கு ஏற்பட்ட நிலை! samugammedia

Tamil nila / Apr 23rd 2023, 6:39 pm
image

Advertisement

ஜனாதிபதியின் அலுவலக பிரதானியான சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலன்னறுவை காவற்துறையில் கடமையாற்றும் 55 வயதான பொலிஸ் பரிசோதகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 பொலிஸ் உத்தியோகத்தர்களை வௌ;வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவினால் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதம் தொடர்பில் சந்தேகம் அடைந்த வடமத்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் வினவியுள்ளார்.

இவ்வாறானதொரு கடிதம் சாகல ரத்நாயக்கவினால் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், அந்தக் கடிதத்தை விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த, சந்தேகநபர் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

சாலகவின் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகருக்கு ஏற்பட்ட நிலை samugammedia ஜனாதிபதியின் அலுவலக பிரதானியான சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்த பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொலன்னறுவை காவற்துறையில் கடமையாற்றும் 55 வயதான பொலிஸ் பரிசோதகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.14 பொலிஸ் உத்தியோகத்தர்களை வௌ;வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவினால் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கடிதம் தொடர்பில் சந்தேகம் அடைந்த வடமத்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் வினவியுள்ளார்.இவ்வாறானதொரு கடிதம் சாகல ரத்நாயக்கவினால் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், அந்தக் கடிதத்தை விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த, சந்தேகநபர் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement