• Nov 26 2024

எரிபொருள், எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானத்தை திடீரென அரசாங்கம் கைவிட காரணம் என்ன?

Sharmi / Aug 1st 2024, 2:58 pm
image

நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானம் நேற்றைய தினத்தில் திடீரென மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனி, ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நிலையில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக அரசாங்கம் கருதியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் பட்சத்தில், ஏரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் சர்வதேச சந்தையில் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் ஆகஸ்ட் மாதம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்தே, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதேவேளை, ஈரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 


எரிபொருள், எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானத்தை திடீரென அரசாங்கம் கைவிட காரணம் என்ன நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானம் நேற்றைய தினத்தில் திடீரென மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனி, ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நிலையில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக அரசாங்கம் கருதியுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் பட்சத்தில், ஏரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் சர்வதேச சந்தையில் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.இந்த நிலையில், இலங்கையில் ஆகஸ்ட் மாதம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்தே, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்தது.இதேவேளை, ஈரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement