• Nov 28 2024

மின்தடைக்கு என்ன காரணம்..? உண்மையை நாட்டுக்கு அறிவியுங்கள்..! – சஜித் சபையில் கோரிக்கை

Chithra / Dec 10th 2023, 11:07 am
image

 


நாட்டில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு என்ன காரணம்? ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின்தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும் என சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் நேற்று மின்தடை ஏற்பட்டது. இந்த செயற்பாடானது மிகவும் பாரதூரமான ஒன்று. இந்த மின் தடை காரணமாக நீர் விநியோகத் தடையும் ஏற்பட்டது. 

வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பல சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன.

இந்த விடயம் குறித்து மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதற்காக நான் கூறவில்லை. நேற்று இந்த மின்தடை ஏற்பட்டமைக்கான உண்மையான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துகொள்வதைவிடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.


 இதேவேளை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று உரையாற்றவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின்தடைக்கு என்ன காரணம். உண்மையை நாட்டுக்கு அறிவியுங்கள். – சஜித் சபையில் கோரிக்கை  நாட்டில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு என்ன காரணம் ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின்தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும் என சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு முழுவதும் நேற்று மின்தடை ஏற்பட்டது. இந்த செயற்பாடானது மிகவும் பாரதூரமான ஒன்று. இந்த மின் தடை காரணமாக நீர் விநியோகத் தடையும் ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பல சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன.இந்த விடயம் குறித்து மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதற்காக நான் கூறவில்லை. நேற்று இந்த மின்தடை ஏற்பட்டமைக்கான உண்மையான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துகொள்வதைவிடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதேவேளை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று உரையாற்றவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement