• Feb 15 2026

திடீரென ஏற்படவுள்ள வானிலை மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம் !

dileesiya / Dec 6th 2025, 5:16 pm
image

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுள் ஏற்படவுள்ள  வானிலையில் மாற்றம்  தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னறிவிப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட  அறிக்கையின் படி, 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என  குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.



திடீரென ஏற்படவுள்ள வானிலை மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுள் ஏற்படவுள்ள  வானிலையில் மாற்றம்  தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னறிவிப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட  அறிக்கையின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என  குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement