• Sep 29 2024

கோட்டா செய்தது பிழையான நடவடிக்கை – ரணில் விக்கிரமசிங்கவே சரியானவர் - இனவாதியான எம்.பி பல்டி! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 3:30 pm
image

Advertisement

இந்த நாட்டின் சமாதானத்திற்காகவும் இலங்கை மக்களின் அமைதிக்காகவும் போராடிய இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜெனிவாவில் யுத்த குற்றவாளிகளாக 

குற்றம் சுமத்திய போது ஆர்ப்பாட்டம் செய்த எவரும் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்ததின் போது  26ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தாகவும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான வீரரர்கள் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டதாவும் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் மொட்டுக்கட்சியில் இருந்து பிரிந்து எதிர்க்கட்சிக்கு சென்றுள்ள சிலர் மக்களுக்கு பிழையான விடயங்களை தெரிவிப்பதாகவும் எனவே கடந்த காலத்தில் குறிப்பாக கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்றும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது சட்டத்தை மீறி செயற்பட்டவர்களை கோட்டாபய தண்டிக்கவில்லை என்றும் அதுவே கோட்டா விட்ட மிகப்பெரிய பிழை என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் நாட்டின் துரோகிகள் அல்லது கிளர்ச்சியாளர்கள் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுக்களை பதிக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இதேவேளை ரணில் விக்கரமசிங்கவை பாராட்டவேண்டும் என்றும் குறிப்பாக இந்த நாட்டில் சட்டத்தை மீறி செய்படுவர்களை தண்டித்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.





கோட்டா செய்தது பிழையான நடவடிக்கை – ரணில் விக்கிரமசிங்கவே சரியானவர் - இனவாதியான எம்.பி பல்டி samugammedia இந்த நாட்டின் சமாதானத்திற்காகவும் இலங்கை மக்களின் அமைதிக்காகவும் போராடிய இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜெனிவாவில் யுத்த குற்றவாளிகளாக குற்றம் சுமத்திய போது ஆர்ப்பாட்டம் செய்த எவரும் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.கடந்த யுத்ததின் போது  26ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தாகவும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான வீரரர்கள் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டதாவும் குறிப்பிடுகின்றார்.அத்துடன் மொட்டுக்கட்சியில் இருந்து பிரிந்து எதிர்க்கட்சிக்கு சென்றுள்ள சிலர் மக்களுக்கு பிழையான விடயங்களை தெரிவிப்பதாகவும் எனவே கடந்த காலத்தில் குறிப்பாக கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்றும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.காலிமுகத்திடல் போராட்டத்தின் போது சட்டத்தை மீறி செயற்பட்டவர்களை கோட்டாபய தண்டிக்கவில்லை என்றும் அதுவே கோட்டா விட்ட மிகப்பெரிய பிழை என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலத்தில் நாட்டின் துரோகிகள் அல்லது கிளர்ச்சியாளர்கள் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுக்களை பதிக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.இதேவேளை ரணில் விக்கரமசிங்கவை பாராட்டவேண்டும் என்றும் குறிப்பாக இந்த நாட்டில் சட்டத்தை மீறி செய்படுவர்களை தண்டித்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement