கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் குறித்த மோதல் தொடர்பான காணொளி வைரலாகப் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் பகிடிவதையுடன் தொடர்புடையதல்ல எனப் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கடந்த நவம்பர் 4ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் 2ஆம் திகதி பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பகிடிவதைச் சம்பவம் அல்ல என்றும், இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடே மோதலுக்குக் காரணம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டுக்குத் தகுதி பெற்ற பின்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றைத் தொடர்ந்து இந்த முரண்பாடு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளாகத் திருத்தப்பட்டும், புகைப்படங்கள் மாற்றியமைக்கப்பட்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முரண்பாட்டைப் பகிடிவதைச் சம்பவமாகச் சித்தரித்து பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் எதிர்வரும் சனிக்கிழமை யக்கல பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் மோதலின் பின்னணி என்ன விசாரணையில் அதிர்ச்சித் தகவல் கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் குறித்த மோதல் தொடர்பான காணொளி வைரலாகப் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் பகிடிவதையுடன் தொடர்புடையதல்ல எனப் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கடந்த நவம்பர் 4ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் 2ஆம் திகதி பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இது பகிடிவதைச் சம்பவம் அல்ல என்றும், இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடே மோதலுக்குக் காரணம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டுக்குத் தகுதி பெற்ற பின்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றைத் தொடர்ந்து இந்த முரண்பாடு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பான காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளாகத் திருத்தப்பட்டும், புகைப்படங்கள் மாற்றியமைக்கப்பட்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.தனிப்பட்ட முரண்பாட்டைப் பகிடிவதைச் சம்பவமாகச் சித்தரித்து பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் எதிர்வரும் சனிக்கிழமை யக்கல பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.