அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வதிவிடம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு உரிய வாழ்விடங்கள் இல்லாத நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, மக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் உட்பட ஏனைய செயற்பாடுகள் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட முற்பகுதியில் இந்நகர் பகுதியில் பெய்த அடை மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
குறித்த வெள்ளம் காரணமாக இப்பகுதி பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியதுடன் ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற பிரதான பாலம் ஒன்றும் பாரிய உடைப்பெடுத்துள்ளது.
இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும், இச்சேவை தடைப்பட்டுள்ளதனால் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டினையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற இப்பகுதியில் வீடு இல்லாப்பிரச்சினை, பொது மையவாடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அத்துடன் குறித்த அஷ்ரப் நகரில் இருந்து பாலம் உடைவு காரணமாக ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டி ஒன்றிற்கு தலா 2000 ரூபா செலுத்தி செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர இப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர் வயது 4 சிறுவன் ஒருவன் மரணமடைந்ததாகவும் குறித்த சடலத்தை ஒலுவில் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எப்போது எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மக்கள். அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வதிவிடம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு உரிய வாழ்விடங்கள் இல்லாத நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.அதேவேளை, மக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் உட்பட ஏனைய செயற்பாடுகள் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வருட முற்பகுதியில் இந்நகர் பகுதியில் பெய்த அடை மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.குறித்த வெள்ளம் காரணமாக இப்பகுதி பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியதுடன் ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற பிரதான பாலம் ஒன்றும் பாரிய உடைப்பெடுத்துள்ளது.இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும், இச்சேவை தடைப்பட்டுள்ளதனால் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டினையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.அதேவேளை, சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற இப்பகுதியில் வீடு இல்லாப்பிரச்சினை, பொது மையவாடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.அத்துடன் குறித்த அஷ்ரப் நகரில் இருந்து பாலம் உடைவு காரணமாக ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டி ஒன்றிற்கு தலா 2000 ரூபா செலுத்தி செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.இது தவிர இப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர் வயது 4 சிறுவன் ஒருவன் மரணமடைந்ததாகவும் குறித்த சடலத்தை ஒலுவில் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.அதேவேளை குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.