• Dec 15 2024

வெள்ளைவானில் வந்தவர்கள் குடும்பஸ்தர் மீது தாக்குதல்- தண்ணீரூற்று பிரதேசத்தில் பதற்றம்!

Tamil nila / Dec 15th 2024, 6:26 am
image

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வெள்ளைவானில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று  காலை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நபர்கள் என சந்தேகிக்கப்பவர்களுக்கும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளைவானில் வந்த கும்பல் ஒன்று முல்லைத்தீவு பொலிஸ் என கூறி குறித்த குடும்பஸ்தரை அவரது வீட்டிற்குள் அழைத்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன் போது 44 அகவையுடைய ஊற்றங்கரை வீதி தண்ணீரூற்று முள்ளியவளையினை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் கஜறூபன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலம் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

வெள்ளைவானில் வந்தவர்கள் குடும்பஸ்தர் மீது தாக்குதல்- தண்ணீரூற்று பிரதேசத்தில் பதற்றம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வெள்ளைவானில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று  காலை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நபர்கள் என சந்தேகிக்கப்பவர்களுக்கும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில்யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளைவானில் வந்த கும்பல் ஒன்று முல்லைத்தீவு பொலிஸ் என கூறி குறித்த குடும்பஸ்தரை அவரது வீட்டிற்குள் அழைத்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதன் போது 44 அகவையுடைய ஊற்றங்கரை வீதி தண்ணீரூற்று முள்ளியவளையினை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் கஜறூபன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலம் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement