• May 20 2024

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் யார்..?? முன்மொழிந்தார் ஜனாதிபதி.! samugammedia

Chithra / Jun 18th 2023, 2:38 pm
image

Advertisement

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு, பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்த பின்னர், பேராசிரியர் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பதில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையை ஒழுங்குபடுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய ஜனக ரத்நாயக்க கடந்த மே மாதம் 24ஆம் திகதி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை புதியவர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், பொது மக்களைப் பாதுகாக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட சுயாதீன ஆணைக்குழுவாக ஆணைக்குழு நிறுவப்பட்டது. 

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது அல்லது குறைப்பது, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது, நுகர்வோருக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவது, மின்சாரத் திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற அனைத்து முடிவுகளும் பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு இருந்த போதிலும் அது தொடர்பான இறுதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அந்த இரண்டு நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் யார். முன்மொழிந்தார் ஜனாதிபதி. samugammedia நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு, பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.எனவே அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்த பின்னர், பேராசிரியர் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பதில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபையை ஒழுங்குபடுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய ஜனக ரத்நாயக்க கடந்த மே மாதம் 24ஆம் திகதி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை புதியவர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 2002ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், பொது மக்களைப் பாதுகாக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட சுயாதீன ஆணைக்குழுவாக ஆணைக்குழு நிறுவப்பட்டது. அதன்படி, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது அல்லது குறைப்பது, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது, நுகர்வோருக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவது, மின்சாரத் திட்டங்களை அங்கீகரிப்பது போன்ற அனைத்து முடிவுகளும் பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.இதற்கு மேலதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு இருந்த போதிலும் அது தொடர்பான இறுதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அந்த இரண்டு நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement