• Jan 26 2025

ஜனாதிபதி வேட்பாளர் யார்..? பசிலுடன் மொட்டுக் கட்சி உறப்பினர்கள் அவசர சந்திப்பு..!

Chithra / Mar 13th 2024, 12:03 pm
image

 

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

இதேவேளை, பசில் ராஜபக்ச கட்சியின் உறுப்பினர்களை தற்பொழுது சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ரீதியில் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளர் யார். பசிலுடன் மொட்டுக் கட்சி உறப்பினர்கள் அவசர சந்திப்பு.  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.இதேவேளை, பசில் ராஜபக்ச கட்சியின் உறுப்பினர்களை தற்பொழுது சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ரீதியில் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement