• Apr 23 2025

யாழ்ப்பாணம் மாநகர சபையில் யாருக்கு ஆதரவு வழங்குவது? மணிவண்ணன் எடுத்த தீர்மானம்..!

Thansita / Apr 22nd 2025, 9:36 pm
image

யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபையில் நாம் தமிழ் மக்கள் கூட்டணியாக மான் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதில் குறிப்பாக நல்லூர் மற்றும் காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஏனைய சபைகளும் கணிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். 

மாநகர சபையில் எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால், நாம் யாருக்கு ஆதரவு வழக்கின்றோம் என்பது தொடர்பில் மக்களுக்கு மிக விரைவில் அறிவிப்போம். 

சக தமிழ் தேசிய கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வரும் பட்சத்தில் அந்த கட்சிக்கு எமது ஆதரவை வழங்குவோம் அதற்காக அந்த கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம். 

தமிழ் மக்களுடன் அன்புரிமையுடன் நாம் கேட்டுக்கொள்வது, தமிழ் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். ஜனநாயத்தை பாதுகாக்க தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார். 


யாழ்ப்பாணம் மாநகர சபையில் யாருக்கு ஆதரவு வழங்குவது மணிவண்ணன் எடுத்த தீர்மானம். யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபையில் நாம் தமிழ் மக்கள் கூட்டணியாக மான் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதில் குறிப்பாக நல்லூர் மற்றும் காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஏனைய சபைகளும் கணிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். மாநகர சபையில் எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால், நாம் யாருக்கு ஆதரவு வழக்கின்றோம் என்பது தொடர்பில் மக்களுக்கு மிக விரைவில் அறிவிப்போம். சக தமிழ் தேசிய கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வரும் பட்சத்தில் அந்த கட்சிக்கு எமது ஆதரவை வழங்குவோம் அதற்காக அந்த கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம். தமிழ் மக்களுடன் அன்புரிமையுடன் நாம் கேட்டுக்கொள்வது, தமிழ் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். ஜனநாயத்தை பாதுகாக்க தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement