• Sep 20 2024

அடுத்த ஜனாதிபதி யார்? கருத்துக் கணிப்பில் சாதனை படைத்த ரணில்...!

Sharmi / Jul 29th 2024, 9:33 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புக்களின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்  உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குளியாப்பிடிய பிரதேசத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை தொங்கு பாலத்தில் சென்றுதான் முன்னேற்ற வேண்டிய நிலை இருந்த போது, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்துகொண்டு நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொங்குபாலத்தை தற்போது கடந்துள்ளார்.

தொங்குபாலத்தை கடந்த பின்னர் தற்போது பலரும் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு வழங்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எவ்வாறான கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வந்தார்கள் என்பதை மந்துவிடக்கூடாது. ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்து, அன்று மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார்.
தற்போது நாட்டை அபிவிருத்தி செய்து, எமது கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.

அத்துடன் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அதனால் ரணில் விக்ரமசிங்கவை சுயாதீன வேட்பாளராக களமிறக்கி அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த கட்சியின் நூற்றுக்கு 80வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கிறது. அதனால் வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று எந்த பயனும் இல்லை.

அதேநேரம் இந்த முறை தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக நாங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டாேம்.

அந்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது. நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், கட்டியெழுப்ப முடியாமல் போகும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த முறை ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டாலும் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் நாங்கள் எமது சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கான பலத்தை இந்த தேர்தலில் நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்க தற்போது மக்கள் வீதிக்கிறங்க ஆரம்பித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதி என்பதாலேயே அவர் போட்டியிட முன்வந்திருக்கிறார்.

நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கருத்துக்கணிப்புகளில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைவிட ரணில் விக்ரமசிங்க பல மடங்கு முன்னணியில் இருக்கிறார்  எனவும் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி யார் கருத்துக் கணிப்பில் சாதனை படைத்த ரணில். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புக்களின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்  உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.குளியாப்பிடிய பிரதேசத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை தொங்கு பாலத்தில் சென்றுதான் முன்னேற்ற வேண்டிய நிலை இருந்த போது, நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்துகொண்டு நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொங்குபாலத்தை தற்போது கடந்துள்ளார்.தொங்குபாலத்தை கடந்த பின்னர் தற்போது பலரும் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு வழங்குமாறு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எவ்வாறான கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வந்தார்கள் என்பதை மந்துவிடக்கூடாது. ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக இருந்து, அன்று மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார்.தற்போது நாட்டை அபிவிருத்தி செய்து, எமது கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.அத்துடன் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அதனால் ரணில் விக்ரமசிங்கவை சுயாதீன வேட்பாளராக களமிறக்கி அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.அந்த கட்சியின் நூற்றுக்கு 80வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கிறது. அதனால் வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று எந்த பயனும் இல்லை.அதேநேரம் இந்த முறை தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக நாங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டாேம்.அந்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது. நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், கட்டியெழுப்ப முடியாமல் போகும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.இந்த முறை ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டாலும் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் நாங்கள் எமது சின்னத்தில் போட்டியிடுவோம். அதற்கான பலத்தை இந்த தேர்தலில் நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.எனவே ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்க தற்போது மக்கள் வீதிக்கிறங்க ஆரம்பித்துள்ளனர்.ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதி என்பதாலேயே அவர் போட்டியிட முன்வந்திருக்கிறார்.நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கருத்துக்கணிப்புகளில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைவிட ரணில் விக்ரமசிங்க பல மடங்கு முன்னணியில் இருக்கிறார்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement