கட்சியின் நிறைவேற்றுக் குழு, ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது மாற்றுக் கருத்தும் இருந்தது ஆனால் அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கு இருப்பதனால் முடிவுகளை மேற்கொண்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்றையதினம்(24) கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
அதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன்,
இது நியாயமான வேலை அல்ல. ஜனநாயகத்தை மீறுகின்ற செயல். அது கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டது. தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஏன் ஆதரவு வழங்கினேன் ரிஷாட் பதியுதீன் பகிரங்கம் கட்சியின் நிறைவேற்றுக் குழு, ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது மாற்றுக் கருத்தும் இருந்தது ஆனால் அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கு இருப்பதனால் முடிவுகளை மேற்கொண்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்றையதினம்(24) கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.அதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன்,இது நியாயமான வேலை அல்ல. ஜனநாயகத்தை மீறுகின்ற செயல். அது கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டது. தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.