• Nov 26 2024

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசு அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை? சாணக்கியன் கேள்வி samugammedia

Chithra / Dec 5th 2023, 1:14 pm
image

 

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர்.

எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான  மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்படுகின்றது. 

இத்தேவையை பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு  மூலம் செயற்படுத்த  முடிந்த போதிலும் இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடைவதைக்  காணக்கூடியதாக உள்ளது.

எனவே திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.

பாடகி  யொஹாணிக்கு கொழும்பில் வீடொன்றினை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு 2  தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த  71 வயதான முல்லைத்தீவினைச் சேர்ந்த அகிலத்திருநாயகிக்குச்  செய்யப்போவது என்ன?

அதுமட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் Under 19 கிரிக்கட் குழுவில் தெரிவாகியுள்ளார். 

இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசு அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை சாணக்கியன் கேள்வி samugammedia  பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர்.எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான  மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்படுகின்றது. இத்தேவையை பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு  மூலம் செயற்படுத்த  முடிந்த போதிலும் இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடைவதைக்  காணக்கூடியதாக உள்ளது.எனவே திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.பாடகி  யொஹாணிக்கு கொழும்பில் வீடொன்றினை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு 2  தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த  71 வயதான முல்லைத்தீவினைச் சேர்ந்த அகிலத்திருநாயகிக்குச்  செய்யப்போவது என்னஅதுமட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் Under 19 கிரிக்கட் குழுவில் தெரிவாகியுள்ளார். இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement