• Jun 26 2024

அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன் – ஈ.பி.டி.பி கேள்வி!

Chithra / Jun 18th 2024, 4:08 pm
image

Advertisement


2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது இன்று கூறும் நிபந்தனையை சம்பந்தன் ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்படும் பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என்கின்ற சந்தேகமும் எழாமலில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதி உச்சமானக அளவில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்டசியின் சிரேஸ்ட தலைவருமான இரா சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் இக்கோரிக்கையை கடந்த 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என்ற கேள்வி தமிழ் மக்களிடையே இன்று எழுகின்றது.

இதேநேரம் எதிர்வரும் செப்ரம்பர் 17 இக்கும் ஒக்ரோபர் 16 இக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள அநிலையில் தேர்தலில் மும்முனை போட்டிக்கான சூழல் காணப்படும் நிலையில் சுயநிர்ணயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் வேட்பாளர்கள் முன்வைக்கப் போகின்றார்கள் என்பதை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அதுமட்டுமன்றி தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் அவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளதாக தெரியவருகின்றது அவ்வாறாயின் சம்பந்தன் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஏன் இதனை வலியுறுத்தவில்லை.

இதேநேரம் முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரிவித்திருந்தார். இதேநேரம் அவரது இந்த கூற்றை கூட்டமைப்பினர் எவரும் மறுத்திருக்கவும் இல்லை

அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என்கின்ற கேள்வியும் எழாமலில்லை.  

இதேவேளை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அண்மையில் தமிழிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், துரோகி என பட்டம் சூட்டுவார்கள் என்று அஞ்சி உண்மையை மறைக்கமாட்டேன் எனவும் பொது வேட்பாளர் என்பது ஒரு விசப்பரிட்சை எனவும் கூறியிருந்தார்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக தீர்விமாக பிரசாரத்தை மக்களித்தே எடுத்துச் செல்லப்போவதாகவும் அவர் கர்ஜ்ஜனை செய்திருந்தார். பின்னர் வவுனியாவில் அவர்களது கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது

பொதுவேட்பாளர் என்ற விடயம் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனால்தான தமிழ் கட்சிகளுக்குள் பொது இணக்கப்பாடும் ஒற்றுமையின்மையும் காணப்படுகின்ற சூழலில் பொது வேட்பாளர் விடயம் என்பது சாத்தியமற்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் சாணக்கியத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.  

அதேநேரம் தமிழ் பொது வேட்பாளராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் மற்றுரு முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கமும் தளமிறங்க தயாரென அறிக்கை விட்டுள்ளனர். இவர்களை தமிழ் மக்கள் கணக்கில் எடுக்கப்போவதில்லை. அதேநேரம் இவர்களது பின்னணிகள் எதுவாக இருந்தன என்பதை கடந்தகால பதிவுகள் இதற்கு சான்றாகவும் உள்ளன.

ஆயினும் எமது அன்றாட பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை போன்றவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்கின்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான வழிகாட்டலை எதிர்பார்த்துள்ளார்கள்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதுபோன்று பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அவசியமானதுமாகும். 

ஆகவே இவர்களுடைய பொது வேட்பாளர் என்ற விடயமோ அல்லது சம்பந்தனுடைய திடீர் கரிசனையையோ மக்கள் தெளிவாக தெரிந்துவைத்திருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர் கடந்தகாலங்களில் ஈ.பி.டி.பி கூறிய அல்லது முன்வைத்த விடயங்களே நடைமுறை சாத்தியமானதாகி வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன் – ஈ.பி.டி.பி கேள்வி 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது இன்று கூறும் நிபந்தனையை சம்பந்தன் ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்படும் பெட்டிகள் தான் தீர்மானித்ததா என்கின்ற சந்தேகமும் எழாமலில்லை என்றும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதி உச்சமானக அளவில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்டசியின் சிரேஸ்ட தலைவருமான இரா சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் இக்கோரிக்கையை கடந்த 2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என்ற கேள்வி தமிழ் மக்களிடையே இன்று எழுகின்றது.இதேநேரம் எதிர்வரும் செப்ரம்பர் 17 இக்கும் ஒக்ரோபர் 16 இக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள அநிலையில் தேர்தலில் மும்முனை போட்டிக்கான சூழல் காணப்படும் நிலையில் சுயநிர்ணயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் வேட்பாளர்கள் முன்வைக்கப் போகின்றார்கள் என்பதை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அதுமட்டுமன்றி தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் அவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளதாக தெரியவருகின்றது அவ்வாறாயின் சம்பந்தன் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஏன் இதனை வலியுறுத்தவில்லை.இதேநேரம் முன்னாள் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரிவித்திருந்தார். இதேநேரம் அவரது இந்த கூற்றை கூட்டமைப்பினர் எவரும் மறுத்திருக்கவும் இல்லைஅத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா என்கின்ற கேள்வியும் எழாமலில்லை.  இதேவேளை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அண்மையில் தமிழிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், துரோகி என பட்டம் சூட்டுவார்கள் என்று அஞ்சி உண்மையை மறைக்கமாட்டேன் எனவும் பொது வேட்பாளர் என்பது ஒரு விசப்பரிட்சை எனவும் கூறியிருந்தார்.தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக தீர்விமாக பிரசாரத்தை மக்களித்தே எடுத்துச் செல்லப்போவதாகவும் அவர் கர்ஜ்ஜனை செய்திருந்தார். பின்னர் வவுனியாவில் அவர்களது கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றதுபொதுவேட்பாளர் என்ற விடயம் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனால்தான தமிழ் கட்சிகளுக்குள் பொது இணக்கப்பாடும் ஒற்றுமையின்மையும் காணப்படுகின்ற சூழலில் பொது வேட்பாளர் விடயம் என்பது சாத்தியமற்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் சாணக்கியத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.  அதேநேரம் தமிழ் பொது வேட்பாளராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் மற்றுரு முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கமும் தளமிறங்க தயாரென அறிக்கை விட்டுள்ளனர். இவர்களை தமிழ் மக்கள் கணக்கில் எடுக்கப்போவதில்லை. அதேநேரம் இவர்களது பின்னணிகள் எதுவாக இருந்தன என்பதை கடந்தகால பதிவுகள் இதற்கு சான்றாகவும் உள்ளன.ஆயினும் எமது அன்றாட பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை போன்றவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்கின்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தீர்க்கமான வழிகாட்டலை எதிர்பார்த்துள்ளார்கள்.இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதுபோன்று பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அவசியமானதுமாகும். ஆகவே இவர்களுடைய பொது வேட்பாளர் என்ற விடயமோ அல்லது சம்பந்தனுடைய திடீர் கரிசனையையோ மக்கள் தெளிவாக தெரிந்துவைத்திருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர் கடந்தகாலங்களில் ஈ.பி.டி.பி கூறிய அல்லது முன்வைத்த விடயங்களே நடைமுறை சாத்தியமானதாகி வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement