• Feb 13 2025

அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு என்ன தயக்கம்? வெளியான அதிரடி அறிவிப்பு

Chithra / Feb 13th 2025, 2:53 pm
image


நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது. 

அவர் மிக உயர்ந்த சபையின் நபர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். 

பொலிஸார் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ளவேண்டும். எனவே அந்த வகையில் செயல்படுவது அவரது கடமை. 

இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எஅந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும்.

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு என்ன தயக்கம் வெளியான அதிரடி அறிவிப்பு நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது. அவர் மிக உயர்ந்த சபையின் நபர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். பொலிஸார் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ளவேண்டும். எனவே அந்த வகையில் செயல்படுவது அவரது கடமை. இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எஅந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும்.யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement